தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.11

பின்லேடன் கொல்லப்பட்டது, முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் இல்லை: ஜனாதிபதி ஒபாமா கருத்து


வாஷிங்டன், பின்லேடன் கொல்லப்பட்டதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார்.
அல்-கொய்தா இயக்க தலைவர் பின்லேடன் கொல்லப்பட்டது பற்றி ஒபாமா டெலிவிஷனில் உரையாற்றுகையில் கூறியதாவது:-
எல்லோருக்கும் வணக்கம். அமெரிக்க மக்களுக்கும்
உலகிற்கும் முக்கியமான செய்தியொன்றை இப்போது நான் தெரிவிக்கிறேன். குழந்தைகள், பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான அப்பாவி மனிதர்களின் படுகொலைக்கு காரணமான பயங்கரவாதி அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் பின்லேடன், அமெரிக்க படையினர் நடத்திய அதிரடித்தாக்குதலில் கொல்லப்பட்டார் என்பதே அந்த முக்கிய செய்தி.
நமது வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லாத வகையில், பத்தாண்டுகளுக்கு முன்பு அமெரிக்க மக்கள் மீது பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான தாக்குதலை நடத்தினர். கடத்தப்பட்ட விமானங்கள், தரைமட்டமான நியூயார்க் இரட்டைக்கோபுரம், பென்டகனில் சூழ்ந்த கரும்புகை, பென்சில்வேனியாவில் சிதறிக்கிடந்த விமானத்தின் பாகங்கள் என செப்டம்பர் 11 அன்று நிகழ்ந்த கொடூரத்தின் தாக்கம் நமது தேசத்தின் நினைவில் ஆழப்பதிந்து விட்டது. தீரமிக்க நமது குடிமகன்களின் உடனடி நடவடிக்கையாலும் மேலும் அழிவின்றி தப்பித்தோம்.
எனினும் உலகின் பார்வைக்கு படாத உள்ளார்ந்த பல துயரங்களை அனுபவித்ததை நாமறிவோம். எண்ணற்றவர்கள் பட்டினி கிடந்தார்கள். ஆதரவின்றி வளர வேண்டிய சூழ்நிலைக்கு குழந்தைகள் தள்ளப்பட்டன. இப்படியாக பல கிட்டத்தட்ட 3000 பேர் இந்த தாக்குதலில் பலியானது நமது இதயத்தை உலுக்கி விட்டது.
நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இத்தகைய கொடூரத்தாக்குதலை நடத்தியவர்களுக்கு பாடம் புகட்டி நீதியை நிலை நாட்டிடவும் நாம் ஓரணியில் திரண்டு உறுதி பூண்டோம்.
கடந்த பத்தாண்டுகளில் நமது ராணுவத்தினரும் பயங்கரவாத ஒழிப்பு படையினரும் தளராமல் தொடர்ந்து செயல்பட்டதன் விளைவாக, அல்-கொய்தா இயக்கத்துக்கு எதிரான போரில் பல முக்கிய கட்டங்களை எட்ட முடிந்தது.
நான் பதவியேற்ற சிறிது காலத்தில், மத்திய புலனாய்வுக்குழு (சி.ஐ.ஏ.) இயக்குனர் லியோன் பனேட்டாவுக்கு ஒரு உத்தரவிட்டேன். அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தை எல்லா வகையிலும் செயலிழக்கச் செய்வது நமது முக்கிய நோக்கமாக இருக்கின்ற போதிலும், பின்லேடனை சுட்டு வீழ்த்தியோ அல்லது உயிருடனோ பிடிப்பதை தலையாய முன்னுரிமையாகக்கொள்ளுமாறு அவருக்கு உத்தரவிட்டேன்.
இதன் தொடர்ச்சியாக, நமது புலனாய்வு அதிகாரிகளின் கடுமையான முயற்சிக்கு பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் பின்லேடன் இருப்பிடம் குறித்து முக்கியமான தகவல் கிடைத்து இருப்பதாக எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எனது உத்தரவின்பேரில், பின்லேடனை குறிவைத்து பிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் அமெரிக்க படையினர் இறங்கினர். அசாத்திய தீரமும் திறனும் கொண்ட ஒரு சிறிய அமெரிக்கப்படையினர் இறங்கினர். அசாத்திய தீரமும் திறனும் கொண்ட ஒரு சிறிய அமெரிக்க குழுதான் இந்த தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டது. அமெரிக்கர்கள் யாரும் காயம் அடையவில்லை. அதே நேரத்தில் பொது மக்களும் காயம் அடையாமல் பார்த்துக்கொள்ளப்பட்டனர். இருதரப்புக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டைக்கு பிறகு அமெரிக்க படையினர் ஒசாமா பின்லேடனை சுட்டு வீழ்த்தி அவரது சடலத்தை கைப்பற்றினர்.
கடந்த 20 ஆண்டுகளாக பின்லேடன் அல்-கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்து நம் மீதும் நமது நேச நாடுகள் மீதும் தாக்குதல்களை நடத்தியிருக்கிறார். அந்த இயக்கத்தை கூண்டோடு ஒழிக்கும் அமெரிக்காவின் முயற்சியில் பின்லேடனின் மரணம் ஒரு முக்கியமான சாதனையாகும்.
எனினும் பின்லேடனின் மரணம் நமது முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து விடாது. அல்-கொய்தா இயக்கம் நமக்கு எதிரான தாக்குதல் முயற்சிகளை தொடரும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் நமது மண்ணிலும் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் மிகவும் விழிப்புடனும் இருந்தாக வேண்டும்.
அதேநேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் உறுதிபட சொல்லியாக வேண்டும். அமெரிக்கா ஒரு போதும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தியது இல்லை. இனியும் அவ்வாறு நடக்காது என்பது தான் அது.
ஒரு போருக்கான விலை அமெரிக்கர்களுக்கு நன்கு புரிந்தாலும் ஒரு தேசமாக, அப்பாவி மக்கள் கொல்லப்படும் பட்சத்தில் வெறுமனே கைகட்டிக்கொண்டு நிற்க முடியாது. நமது குடிமக்கள் மற்றும் நேச நாடுகளின் பாதுகாப்பில் நாம் உறுதியுடன் செயல்பட்டாக வேண்டும். நாம் யார் என்பதை அடையாளம் காட்டிய மதிப்பீடுகளுக்கு நாம் உண்மையாக இருந்தாக வேண்டும். செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இந்த தருணத்தில் நாம் ஒன்றைத்தான் சொல்ல முடியும். நீதி நிலைநாட்டப்பட்டு விட்டது என்பதுதான் அந்த முக்கிய செய்தி.
இந்த சாதனைக்காக அயராது பாடுபட்ட அமெரிக்க புலனாய்வு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு பிரிவுகளை சேர்ந்த எண்ணற்ற அதிகாரிகளுக்கு இத்தருணத்தில் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.
பணக்கார நாடு என்பதாலோ அல்லது உலகின் சக்தி வாய்ந்த நாடு என்பதாலோ மட்டும் நாம் இவற்றை சாதித்துவிடவில்லை. எல்லோருக்கும் சுதந்திரம், நீதி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில், பிரிவினையற்ற சமூகமாக, இறைவனின் அடிபணிந்து ஒரே நாடாகத்திகழ்வதால் தான் இவையெல்லாம் சாத்தியமாகியிருக்கிறது. இவ்வாறு ஒபாமா கூறினார்.

0 கருத்துகள்: