தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

18.3.11

எகிப்து:பாதுகாப்பு படைப்பிரிவு கலைப்பு

கெய்ரோ:முபாரக் ஆட்சிக் காலத்தில் மனித உரிமை மீறல்களையும், சித்திரவதைகளையும் அரங்கேற்றிய உள்நாட்டு பாதுகாப்பு ஏஜன்சியை எகிப்து உள்துறை அமைச்சகம் கலைத்துவிட்டது.
முன்னாள் கெய்ரோ பாதுகாப்பு தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான மேஜர் ஜெனரல் மன்சூர் அல் எஸ்ஸாவி இதனை தெரிவித்துள்ளார்.

புதிய தேசிய பாதுகாப்புப் படையும், தீவிரவாத எதிர்ப்புப் படையும் உடனடியாக உருவாக்கப்படும். மனித உரிமை தத்துவங்களையும், அரசியல் சட்டத்தையும் மதிக்கும் ரீதியில் புதிய படை உருவாக்கப்படும். இதற்கான அதிகாரிகள் உடனடியாக நியமிக்கப்படுவர்.
ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் முக்கிய கோரிக்கை பாதுகாப்பு படையை கலைக்க வேண்டுமென்பதாகும். மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை அழிக்க பாதுகாப்பு படையினர் நடத்திய முயற்சியை கடந்த மாதம் எதிர்ப்பாளர்கள் முறியடித்தனர். பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் நுழைந்து எதிர்ப்பாளர்கள் ஆவணங்களை கைப்பற்றினர்.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் கெய்ரோவுக்கு வருகைத் தந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் நபீலுல் அரபியுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்

0 கருத்துகள்: