திரிபோலி:லிபியாவில் எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் பிரதேசங்களை மீட்கும் இறுதிக்கட்ட போராட்டத்தில் கத்தாஃபியின் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
எதிர்ப்பாளர்களின் வசமிருக்கும் அஜ்தாபியை ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. எதிர்ப்பாளர்களின் வலுவான கட்டுப்பாட்டிலிருக்கும் பெங்காசி மற்றும் தப்ரூக்கை
கைப்பற்றுவதற்காக கத்தாஃபியின் ராணுவம் இறுதிக்கட்ட போராட்டத்திற்கு தயாராகுவதாக செய்திகள் கூறுகின்றன.‘ஒன்று அடிபணியுங்கள். அல்லது நாட்டைவிட்டு வெளியேறுங்கள்’ என்ற எச்சரிக்கையுடன் கொடூரமான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு கத்தாஃபியின் ராணுவத்தினர் கோரத் தாண்டவம் ஆடுகின்றது. ஆனால், எதிர்ப்பாளர்களின் படையினர் கடுமையாக எதிர்த்து நிற்கின்றனர். இப்பிராந்தியத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்களின் படையினர் எதிர்த்து போராட தயாராகயிருப்பதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.
இதற்கிடையே லிபியாவை விமானம் பறக்க தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென்பதில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது.
பாரிஸில் கூடிய ஜி-8 நாடுகளின் கூட்டத்திலும் இதுத் தொடர்பாக தெளிவான தீர்மானம் எடுக்க முடியவில்லை. லிபியாவை விமானம் பறக்க தடைச் செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டுமென அரபு லீக் கோரிக்கை விடுத்திருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக