லக்னோ,பிப்.24:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டி பேட்டியளித்ததைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய தேவ்பந்த் துணைவேந்தர் மவ்லானா குலாம் முஹம்மது வஸ்தன்வி தாருல் உலூம் தேவ்பந்தின் துணைவேந்தராக தொடர்ந்து பதவியில் நீடிப்பார்.
ஏற்கனவே துணைவேந்தர் பதவியை ராஜினாமாச் செய்துவிட்டார் என்று வெளியான செய்தியை அவரே மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்து நேற்று தேவ்பந்தில் கூடிய தாருல்
உலூமின் ஆளுகை குழு கூட்டத்தில் வஸ்தன்வியை அதே பதவியில் தொடர அனுமதி வழங்கியது. ஆனால், துணை வேந்தர் பதவியுடன் செயல் இயக்குநர் என்ற புதியதொரு பதவியை உருவாக்கி அப்பதவியில் மவ்லானா அப்துல் காஸிம் பனாரஸியை நியமித்த ஆளுகை குழு வஸ்தன்வியின் அதிகாரத்தை வெட்டிக் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதேவேளையில் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உலமாக்கள் சபை இதுத்தொடர்பாக முடிவு எடுக்கும் வரை வஸ்தன்வி பதவியில் தொடர தேவ்பந்த் நிர்வாகம் அனுமதியளித்தது.
ஸஹாரன்பூரில் முஃப்தி மன்சூர் அஹ்மத், தமிழ்நாட்டில் இப்ராஹீம் மாலிக், மஹராஷ்ட்ரா எம்.எல்.ஏ முஃப்தி இஸ்மாயீல் காஸிமி ஆகியோர்தான் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட உலமாக்கள் சபையின் அங்கத்தினர்கள்.
மஹாராஷ்ட்ரா சட்டமன்ற உறுப்பினரான இஸ்மாயீல் காஸிமிதான் கன்வீனராக பதவி வகிப்பார். வஸ்தன்விக்கு எதிரான விசாரணையை விரைவாக முடிக்கவேண்டும் எனக் கோரியுள்ளதாகவும் ஆனால் அதற்கு கால அவகாசம் எதுவும் விதிக்கவில்லை எனவும் தேவ்பந்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கிறார்.
சில மாதங்களுக்கு முன்பு மவ்லானா மர்கபுல் ஹஸன் மரணித்ததைத் தொடர்ந்து தேவ்பந்தின் துணைவேந்தராக வஸ்தன்வி நியமிக்கப்பட்டிருந்தார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக