தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

25.2.11

மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரான் போர்க்கப்பல்கள்: அமெரிக்கா கலக்கம்


வாசிங்டன் மத்தியதரைக் கடல் பகுதியில் ஈரானுக்கு சொந்தமான இரு போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன. இது அமெரிக்காவை கவலை அடையவைத்துள்ளது.
1979-ல் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் சூயஸ் கால்வாயை கடந்து இப்போதுதான் முதல் தடவையாக ஈரான் போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வருகின்றன. ஈரானின் இச்செயலை அத்துமீறிய
செயலாகவே கருதுகிறோம். இதனால் அக்கப்பல்கள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை எச்சரிக்கையோடு கவனித்து வருகிறோம் என்று அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பிலிப் குரோவ்லே தெரிவித்துள்ளார்.
ஈரான் எப்போதும் தங்களுக்கு எதிராகவே செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் கருதுகிறது. இதனால் அந்நாட்டு போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடல் பகுதியில் வலம் வருவதற்கும் அந்நாடு அதிருப்தி தெரிவித்துள்ளது. ஈரான் போர்க்கப்பல்களால் அச்சுறுத்தல் ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் என்று தமது நாட்டு கடற்படைக்கு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் தங்களது நாட்டு போர்க்கப்பல்கள் மத்தியதரைக்கடல் பகுதியில் வலம் வருவது வழக்கமான ஒன்றுதான் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எகிப்துடன் பகைமை கொண்டிராத எந்த ஒரு நாட்டின் போர்க்கப்பலும் சூயல் கால்வாயை கடந்து மத்தியதரைக் கடலில் வலம் வரலாம் என்று சூயஸ் கால்வாய் நிர்வாகம் தெரிவித்துள்ளது

0 கருத்துகள்: