தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.2.11

மோடியை கைது செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்


குஜராத் மாநிலத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தை திட்டமிட்டு நடத்தியவர் நரேந்தி மோடிதான் என்றாலும் அவருக்கு இதில் தொடர்பு இல்லை என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மோடியின் ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.
குஜராத் மாநில அரசு இந்தக் கலவர வழக்கை சரியாக விசாரணை நடத்தாது என்று கருதிய உச்சநீதி மன்றம் கலவர வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு ளுஐவு என்னும் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. இந்தக்குழு தக்க முறையில் விசாரணை நடத்தி 600 பக்க அறிக்கையை சீல் வைத்து உச்சநீதி மன்றத்தில் மே 2010ல் ஒப்படைத்தது.
இந்த அறிக்கை நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட மறுநாள் மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக பாஜகவினர் பொய்ப்பிரச்சாரம் செய்தனர்.அத்வானியே மோடி குற்றமற்றவர் என்று அந்த அறிக்கையில் உள்ளதாக தனது வுறவைவநச ல் எழுதினார்.
இதுதான் உண்மை என்று இந்திய மக்கள் அனைவரையும் பாஜகவினர் நம்ப வைத்து ஏமாற்றி வந்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட 600 பக்க அறிக்கையை தெஹல்கா இணையதளமும் ஹைட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியும் அதன் நகலை வெளியுட்டுள்ளனர். பாஜகவின் முகத்திரையைக் கிழிக்கும் வகையால் நரேந்திர மோடிக்கு கலவரத்தில் பங்கு உண்டு என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 13 ஆதாரங்களையும் ளுஐவு வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடியை சிறப்புப் புலனாய்வுக்குழு குற்றம் சாட்டவில்லை என்ற பிரச்சாரம் பொய் என்பது தெளிவாகிவிட்டதால் கடமை தவறி கலரத்i முன்னின்று நடத்திய நரேந்திர மோடி அரசை டிஸ்மிஸ் செய்து அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்துகிறது.
2 பு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறை கேடு என்ற பிரச்சனை சில வருடங்களுக்கு முந்தியது என்றாலும் நீரா ராடியாவின் உரையாடல் அம்பலமானவுடன் ராசாவின் ராஜினாவைக் கோரியவர்கள்,பணத்தை விட அதிக மதிப்புள்ள மனித உயிகளைக் கொன்று குவித்த குற்றவாளியான நரேந்திர மோடி விஷயத்தில் மவுனம் காப்பது வியப்பாக உள்ளது.
ராசா குற்றவாளி என்று தீர்ப்பு அளிப்பதற்கு முன்னரும் , ஆதர்ஷ் குடியிருப்பு ஊழலில் மராட்டிய முன்னாள் முதல்வர் மீது குற்றவாளி என்று தீர்ப்பு வருவதற்கு முன்னரும் குற்றச்சாட்டு வந்துவிட்ட காரணத்தினாலேயே பதவி விலகக் கோரிய பாஜக,அதிமுக,மதிமுக மற்றும் சில கட்சிகள் அதை விட பயங்கரமான குற்றச் செயலில் ஈடுபட்டதாக ளுஐவு யால் குற்றம் சாட்டப்பட்ட பின் அவரை ராஜினாமா செய்ய வலியுறுத்தவில்லை.
எனவே மத்திய அரசாங்கம் நரேந்திர மோடி அரசை டிஸ்மில் செய்து கைது செய்ய வலியுறுத்தி இன்று (5.2.11) மாலை 4 மணிக்கு சென்னை – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநிலத் தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையேற்று நடத்திவைத்தார்கள்.பொதுச் செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
குறுகிய காலத்தில் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பல்லாயிரகணக்கானோர் இதில் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒழுப்ப்பட்ட கோசம்
தூக்கிலிடு! தூக்கிலிடு!
நரேந்திர மோடியை தூக்கிலிடு!
மரண வியாபாரி மோடிக்கு
உதவியாக இருந்தவர்கள்
குஜராத் அரசு செயலர்கள்
காவல்துறையின் ஓநாய்கள்
அத்தனை பேரையும் உடனடியாய்
பதவி நீக்கம் செய்து விடு!
சட்டப் படியாய் அவர்கள் மீது
வழக்குப் பதிவு செய்து விடு!
கயவர்கள் சேர்ந்த சொத்தை எல்லாம்
உடனே ஜபதி செய்திடு!
காவி கும்பலின் ரவுடித்தனத்தால்
வெட்கிக் குனியுது மனிதஇனம்!
பசுவதைக்கெதிராய் கோஷம் போட்டு
மனிதனைக் கொல்லும் பாதகனே!
இரக்கமற்ற அரக்கனே! இரக்கமற்ற அரக்கனே!
இரக்கம் என்பது மனிதப் பண்பு
மிருகத்திற்கும் அது உண்டு
நீ மனிதனுமில்லை மிருகமுமில்லை
என்ன இனம் நீ சொல்லடா?
கயவர் குலம் தான் உன் குலமா?
மௌனமென்ன மௌனமென்ன?
ஜெயலலிதா அம்மையே
போயஸ் தோட்டம் அழைத்து வந்து
விருந்து கொடுக்கப் போறாயா?
மௌனமென்ன மௌனமென்ன?
கருனாநிதி முதல்வரே
டெல்லி சென்று மோடியோடு
போஸ்கொடுக்க தெரியுதோ?
எமதருமை ஹிந்து மக்களே! எமதருமை ஹிந்து மக்களே!
காவி என்ற சொல்லுக்கு
களங்கம் சேர்க்க விடவேண்டாம்
சாது என்ற பேரிலே சூது செய்ய விடவேண்டாம்
டிஸ்மிஸ் செய்! டிஸ்மிஸ் செய்!
மத்திய அரசே டிஸ்மிஸ் செய்!
அரசியலமைப்பிற் கெதிராய் நடந்த
மோடி அரசை டிஸ்மிஸ் செய்!
சுப்ரீம் கோர்ட்டே! சுப்ரீம் கோர்ட்டே!
வெட்கமாக இல்லையா?
எட்டு ஆண்டு ஆன பின்னும்
விசாரணை இன்னும் முடியலையா?
ரகசியம் என்ன ரகசியம் என்ன?
சுப்ரீம் கோர்ட்டே ரகசியம் என்ன?
சிறப்பு புலனாய்வு அறிக்கையை
மறைக்கும் அளவிற்கு ரகசியம் என்ன?
நீதியும் உண்மையும் ரகசியத்தோடு
ஒன்று சேர முடியாதே!
முஸ்லீம்கள் மீது எத்தனையோ
பொய்வழக்கு போட்டீர்கள்
அத்தனை வழக்கிலும் உடனடியாய்
கைது செய்து அடைத்தீர்கள்!
மோடி என்றால் தனிநீதி
முஸ்லீம்களுக்கு எது நீதி!
அத்துல் பிஹாரி வாஜ்பாயி
அத்வானி, மோடி, கட்காரி
ஆர் எஸ் எஸ் அயோக்கியர்கள் அனைவரும்
இரத்தம் குடிக்கும் கட்டேரி!
வேதம் ஓதும் சாத்தான்கள்
சுப்ரமனிய சாமியே, இரட்டை வேட சோவே
எரிக்கபட்ட உயிர்களுக்கும்
துடிதுடித்த உயிர்களுக்கும்
பரிதவித்த உறவினருக்கும்
பதில் சொல் பதில் சொல்
பயங்கரவாத அமெரிக்காவே
உன்னை பயங்கரவாதி என்றதுவே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா
திருப்பி அனுப்பட்டாயே
அனுமதி மறுக்கப்பட்டாயே
செருப்படிகள் பட்டாயே
வெட்கமாக இல்லையா வெட்கமாக இல்லையா?

விஜய் டிவி நிறுவனத்தாருக்கு TNTJ வின் கண்டன கடிதம்


விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும், ”மகான்” என்ற தொடரில் இடம்பெறும் பாடலில் முஸ்லிம்கள் தங்களது உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் விதமாக ஒரு பாடல் வரி இடம்பெறுவதாக தெரியவந்ததை தொடர்ந்து விஜய் டிவி நிறுவனத்தாருக்குதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்( டி.என்.டி.ஜே ) இன்று   (07.02.11) கண்டன கடிதம் எழுதியதியதோடு நேரில் சென்று உடனடியாக அந்த கண்டனத்திற்குரிய வரிகளை நீக்குமாறு டி.என்.டி.ஜே நேரில் வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து அந்த கண்டனத்திற்குரிய வரியை 09.02.11 அன்று முதல் நீக்கிவிடுவதாக விஜய் டிவி நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

கறுப்பு பண பட்டியல்: இந்தியாவுக்கு வழங்க ஜெர்மனி, சுவிஸ் அரசுகள் தயார்


தங்கள் நாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை இந்தியாவிடம் வழங்க தயார் என்று ஜெர்மனி மற்றும் சுவிஸ் அரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், பட்டியலில் உள்ள பெயர்களை வெளியிட கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளன.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்திய கறுப்பு பண முதலைகளின் பட்டியலை பெறுவதற்காக, சுவிஸ் நாட்டுடனும், ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் உள்ள லிச்டென்ஸ்டீன் என்ற குட்டி நாட்டுடனும் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. அதன்படி, லிச்டென்ஸ்டீன் நாட்டில் எல்.ஜி.டி. வங்கியில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் கடந்த ஆண்டு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. வரிஏய்ப்பு குற்றத்துக்காக, அந்த பட்டியலில் உள்ள 17 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீசு அனுப்பியுள்ளது. ஆனால், அவற்றின் பெயர்களை பகிரங்கமாக வெளியிட மறுத்து விட்டது. இதற்கு அந்நாட்டுடன் செய்து கொண்ட ஒப்பந்தமே காரணம்.
இந்நிலையில், கறுப்பு பணத்தை வெளிக்கொணர இந்தியாவுக்கு உதவ தயார் என்று ஜெர்மனி அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டின் நிதி அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், `இந்தியா கேட்டுக்கொண்டால், மேலும் பல கறுப்பு பண முதலைகளின் பெயர்களை இந்தியாவுக்கு அளிக்க தயாராக இருக்கிறோம். பாதிக்கப்பட்ட நாடுகளின் வரித்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் பெயர்களை அளிப்பது வழக்கமானதுதான். ஆனால், அந்த பெயர்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகிரங்கமாக வெளியிடக்கூடாது' என்றார்.
சுவிஸ் நிதி அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறுகையில், `இந்தியாவுடனான திருத்தப்பட்ட வரி ஒப்பந்தம் அமலுக்கு வந்தவுடன், இந்தியாவுக்கு தகவல்களை அளிக்க தயாராக இருக்கிறோம். ஆனால் அத்தகவல்களை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். கோர்ட்டுகளும், அதிகாரிகளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பகிரங்கமாக வெளியிடக் கூடாது' என்றார்

எதிர்க்கட்சிகளுடன் எகிப்து அரசு ஒப்பந்தம்: அமைதி திரும்ப வாய்ப்பு

கெய்ரோ, பிப்எகிப்தில், அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்டது. இதனால் அங்கு போராட்டம் ஓய்ந்து அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

எகிப்து நாட்டில் அதிபர் ஹோஸ்னி முபாரக் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று 13-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது. போராட்டம் காரணமாக தலைநகர் கெய்ரோ உள்ளிட்ட பல நகரங்களில் கலவரம் ஏற்பட்டது. கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. சில இடங்களில் அரசின் ஆதரவாளர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவமும் களத்தில் குதித்தது. எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவர் பதவியில் இருந்து முபாரக் நேற்று முன்தினம் விலகினார். இதேபோல் அவரது மகன் கமால் முபாரக்கும் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகினார்.
அமெரிக்க ஜனாபதி ஒபாமாவும் எகிப்தில் அமைதியை ஏற்படுத்துவதற்காக முயற்சியில் ஈடுபட்டார். இது தொடர்பாக அவர் பல்வேறு நாடுகளின் தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார். இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்த எகிப்து அரசு முன்வந்தது. துணை அதிபர் ஓமர் சுலைமான் போராட்டம் நடத்தி வரும் எதிர்க்கட்சி குழுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட `முஸ்லிம் சகோதரத்துவம்' அமைப்பின் பிரதிநிதிகளை நேற்று அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முகமது எல்பராடி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு குழுக்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கைதான அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.
எகிப்தில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் கொண்டு வருவது என்றும், ஜனாதிபதி தேர்தலில் பலர் போட்டியிடும் வகையில் அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்வது பற்றி ஆராய நீதிபதிகள், அரசியல் தலைவர்கள் அடங்கிய கமிட்டி அமைப்பது என்றும் பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்யப்பட்டது. இந்த கமிட்டி வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்திற்குள் தனது அறிக்கையை வழங்கும்.
அதிபரின் பதவி காலத்தை வரையறுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை துணை அதிபர் ஓமர் சுலைமான் ஏற்றுக் கொண்டார். அத்துடன் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள போராட்டக்காரர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றும், பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்பட மாட்டாது என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏற்பட்ட தகவலை எகிப்து அரசாங்கம் வெளியிட்டது.
பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட முஸ்லிம் சகோதரத்துவம் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் கூறுகையில்; அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அதன் நல்லெண்ணத்தை தெரிவித்து இருப்பதாகவும், ஆனால் உறுதியான மாற்றங்களுக்கான அம்சங்கள் அதில் இல்லை என்றும் தெரிவித்தார்.
கெய்ரோவில் உள்ள விடுதலை சதுக்கத்தில் நேற்றும் பல்லாயிரக்கணக்கான பேர் கூடி இருந்து அதிபர் முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கும் எதிர்க்கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வழக்கமான பணிகளை கவனிக்க வேண்டும் என்றும், அமைதி திரும்ப முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் ராணுவ தளபதி ஹாசன் அல்-ரவுனி கேட்டுக் கொண்டார்.
எகிப்து அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த நாட்டில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில் முபாரக் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வரும் கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம், தலைநகர் கெய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் அங்குள்ள 2 மம்மிகள் (பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மனித உடல்கள்) சேதம் அடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் இதை எகிப்து தொல்லியல் துறையின் தலைவர் சாஹி ஹவாஸ் மறுத்து உள்ளார். கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் அருங்காட்சியகத்தில் உள்ள `மம்மி'கள் எதுவும் சேதம் அடையவில்லை என்றும், அங்கிருந்து இரு மண்டை ஓடுகள் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டதாகவும் பி.பி.சி. டெலிவிசனுக்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்து உள்ளார்

பெனாசிர் கொலையில் முஷாரஃபிற்​கு பங்கு - அறிக்​கை

இஸ்லாமாபாத்,பிப்.7:பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலையில் முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃபிற்கு பங்கிருப்பதாக ஃபெடரல் இன்வெஸ்டிகேசன் ஏஜன்சி தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இச்செய்தியினை தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டுள்ளன. அதிகாரப்பூர்வமாக செய்தி இதுவரை வெளிவரவில்லை.

முஷாரஃப் பெனாசிருக்கு அளித்திருக்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாட்டில் வீழ்ச்சியை ஏற்படுத்தியதாக முன்னர் வெளியான ஐ.நா அறிக்கை கூறியது.

கடந்த 2007-ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணியில் வைத்து பெனாசிர் கொலைச் செய்யப்பட்டார்.

செய்தி:தேஜஸ்௦ மலையாள நாளிதழ்


மும்பை தாக்குதல் பற்றி விசாரிக்க இந்திய விசாரணை குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுப்பு


மும்பை தாக்குதல் வழக்கு குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தானுக்கு செல்ல இருக்கும் இந்திய தேசிய புலனாய்வு குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி அன்று பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாகிஸ்தானில் இருந்து கடல் வழியாக மும்பையில் புகுந்ததால் அவர்களை அனுப்பி வைத்த சதிகாரர்கள் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு விசாரித்து வருகிறது. அதே நேரத்தில், மும்பை தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி முகமது அஜ்மல் கசாப் மீது தனியாக விசாரணை நடைபெறுகிறது.
இதற்கிடையே, மும்பை தாக்குதல் வழக்கின் முக்கிய சாட்சிகள் மற்றும் இந்தியாவை சேர்ந்த அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறும், அதற்காக, நீதித்துறை கமிசன் ஒன்றை அனுப்பிவைப்பதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. அந்த கோரிக்கையை இந்தியா பரிசீலித்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், மும்பை தாக்குதல் குறித்து விசாரிப்பதற்காக பாகிஸ்தான் செல்ல இருந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அனுப்பியுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாகிஸ்தான் நாட்டு சட்டத்தின்படி, எந்தவொரு வழக்கு விசாரணைக்காகவும் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு அமைப்பையும் எங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது. இந்தியாவின் கோரிக்கையையும் பாகிஸ்தானில் இருந்து நீதித்துறை கமிசனை அனுப்புவதையும் ஒப்பீடு செய்யக் கூடாது. ஏனெனில், நீதிமன்ற நடைமுறையின் ஒரு பகுதியாகவே அது அமைகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையே, `பரஸ்பர சட்ட ரீதியான ஒத்துழைப்பு ஒப்பந்தம்' எதுவும் கிடையாது. எனவே, பாகிஸ்தானுக்கு இந்திய புலனாய்வு குழுவை அனுப்பி வைப்பது தொடர்பான கோரிக்கையை ஏற்க முடியாது. இவ்வாறு பாகிஸ்தான் அனுப்பிய செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதனால், சம்பந்தப்பட்ட பாகிஸ்தான் நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகே தேசிய புலனாய்வு குழுவை இந்தியா அனுப்ப முடியும். மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையை மேலும் தாமதப்படுத்துவதற்காகவே இந்திய புலனாய்வு குழுவுக்கு பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது என கருதப்படுகிறது.
இது தவிர, மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகளை பிடித்து தண்டனை வழங்குவதில் பாகிஸ்தானுக்கு ஆர்வம் இல்லை. ஏனெனில், விசாரணைக்கு எதிராக அந்த நாட்டின் கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு சார்பாக இதுவரை மேல் முறையீடு செய்யப்படவில்லை

அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட மறுப்பு: இந்தியா டுடேவை விட்டு வெளியேறினார் ஆசிஷ் கேதான்


புதுடெல்லி,பிப்.8:அஜ்மீர் தர்கா, மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்குகளில் முக்கிய குற்றவாளியான சுவாமி அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இந்தியாடுடே எடிட்டர் வெளியிட மறுத்ததால் அப்பத்திரிகையிலிருந்து வெளியேறினார் ஆசிஷ் கேதான்.

டெஹல்கா சார்பாக குஜராத் இனப்படுகொலை குற்றவாளிகளை ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் வெளிச்சம் போட்டு காட்டியவர்தான் பத்திரிகையாளர் ஆசிஷ் கேதான். இவர் கடந்த ஒன்றரை வருடமாக இந்தியாவின் டுடேவின் கீழ் இயங்கும் ஹெட்லைன் டுடேவில் செய்தியாளராக பணியாற்றி வந்தார். இத்துடன் இந்தியா டுடேவுக்காகவும் செய்தி அறிக்கைகளை தயார் செய்துவந்தார்.

இந்நிலையில், அஸிமானந்தா டெல்லி பஞ்ச்குலா நீதிமன்றத்தில் சுயமாக அளித்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அறிக்கையாக தயார் செய்து இந்தியா டுடேவிடம் அளித்துள்ளார். ஆனால், அதனை வெளியிட இந்தியா டுடேவின் எடிட்டோரியல் டைரக்டர் எம்.ஜே.அக்பர் மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இந்தியா டுடேவிலிருந்து வெளியேறி டெஹல்கா பத்திரிகையில் மீண்டும் இணைந்தார் கேதான். பின்னர் டெஹல்கா அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆசிஷ் கேதான் தற்போது டெஹல்காவின் இன்வெஸ்டிகேஷன் பிரிவு எடிட்டராக பணியாற்றி வருகிறார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்