தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.11

பீ.எல்.ஓ – ஹமாஸ் சேர்ந்தியங்கும் முடிவு ஹமாஸ் அதிரடி பாலஸ்தீனம் விடிவைநோக்கி

பாலஸ்தீன போராளிஅமைப்பான ஹமாஸ் சர்வதேச அ ளவில் பயங்கரவாத அமைப்பாக கணிப்பிடப்பட்டாலும், சமீபகாலமாக மிகவும் சாதுரியமாக காய் நகர்த்தி வருகிற து. பாலஸ்தீன அமைப்பான பீ.எல்.ஓவில் தன்னையும் இ ணைத்துக்கொள்ள இருப்பதாக இன்று ஹமாஸ் அறிவித் துள்ளது. காலஞ்சென்ற பாலஸ்தீன தலைவர் யாசர் அர பாத்தின் அமைப்பான பீ.எல்.ஓ அங்குள்ள பல்வேறு அ மை ப்புக்களை தன்னோடு இணைத்துக்
கொண்ட கூட்டு அமைப்பாகும். ஒரு குடையின் கம்பிகள் போல
பல அரசியல் தாபனங்களை தன்னோடு இணைத்துக் கொண்ட பீ.எல்.ஓவில் ஓரங்கமாக ஹமாஸ் இணைய சம்மதித்திருப்பது மேலை நாடுகளுக்கு பலத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடும் தீவிரவாதம் பேசி, பேச்சுக்களை குழப்பி, தாக்குதல்களை தொடங்கும் முட்டாள்தனமான பாதையில் செல்லும்என எதிர்பார்ப்பவர்களுக்கு: அதன் மூலம் இஸ்ரேலுக்கு சாதாகமான பக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று நம்பப்பட்டது. ஆனால் ஹமாஸ் அமைப்பு சடுதியாக திசை திரும்பி அனைவர் வாயிலும் மண்ணள்ளி வீசியுள்ளது. முற்றிலும் வேறுபட்ட கொள்கைகளை உடைய பீ.எல்.ஓவும், ஹமாஸ் அமைப்பும் இணைவது எப்படி என்று விளங்கப்படுத்தப்படவில்லை. பாலஸ்தீனத்தை தனிநாடாக பிரகடனம் செய்யும் பணிகள் ஐ.நாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே 112 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரகடனம் செய்ய இணங்கிவிட்டன. அமெரிக்காவும், அதைத் தங்கிவாழும் மேலைநாடுகளும் மௌனமாக உள்ளன. இவர்கள் ஹமாஸ் அமைப்பின் தலையில் மிளகாய் அரைத்து பாலஸ்தீன போராட்டத்தையே ஈழத் தமிழரின் போராட்டம் போல நாசம் செய்ய முயல்வர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒரு போரளிஅமைப்பு எடுத்துள்ள இந்த நல்லமுடிவு உலகில் உள்ள அனைத்து போராளி அமைப்புக்களுக்கும் நல்லதோர் முன்மாதிரியாக உள்ளது. முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்ற உண்மையை பலத்த இழப்புக்களின் பின்னர் பாலஸ்தீனம் கண்டு பிடித்துள்ளது. மேலை நாடுகளின் சதி என்னும் பெருவிரலை ஹமாஸ் தறித்திருக்கிறது.என்பதே உண்மை ஈழத் தமிழரின் போராட்டத்தை நசுக்கியது பாலஸ்தீனர்களுக்கு நல்லதோர் படிப்பினையாக மாறியுள்ளமை கவனிக்கத்தக்கது. உலகில் உள்ள மோசமான தீவிரவாத அமைப்புக்களுக்கு எச்சரிக்கை வழங்க ஈழத்தில் ஒரு நியாயமான போராட்டத்தை சர்வதேச சமுதாயம் அழித்திருக்கிறது என்ற உண்மையை உய்த்துணரவும் இந்த நிகழ்வு துணையாக உள்ளது.

0 கருத்துகள்: