தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

24.12.11

சுப்பிரமணியன் சுவாமியை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு?

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீது   தொடுக்கப்பட்ட வழக்கொன்றில், அவரைக் கைது செய் யுமாறு திருச்சூர் நுகர்வோர் நீதிமன்றம் ஆணை பிறப்பி த்துள்ளது.இது தொடர்பில் அறிய வருவதாவது: 1986-ம் ஆண்டில் சுப்பிரமணியன் சுவாமி தலைவராக இருந்த 'எக்ஸ்பிரஸ் மலையாளம் பிரைவேட் லிமிடெட்' என்ற நாளேடு நிறுவனத்தில், வி.என்.நாராயணன் என்பவர் ரூ 10 ஆயிரம் முதலீடு
செய்துள்ளார்.மூன்று வருட கால
ஒப்பந்தத்தில் செய்யப்பட்ட அந்த முதலீடு, குறிப்பிட்ட காலமுதிர்வுக்குப் பின்னும் உரியவருக்குத் திருப்பித் தரப்படவில்லை. சில வருடங்களுக்குப் பின் குறிப்பிட்ட நிறுவனமும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில், பண முதலீடு செய்த நாராயணன், திருச்சூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேற்படி வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதலீடு செய்தவருக்கு 9 சதவீத வட்டியுடன் முதலீட்டுத் தொகையை சுப்பிரமணியன் சுவாமி திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆயினும் சுப்பிரமணிய சுவாமி அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்பதால், நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக அவர் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மேற்படி குற்றத்தை உறுதி செய்து, 2012 ஏப்ரல் 2-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தும்படி தில்லி போலீசாருக்கு உத்தரவிட்டு, ஜாமீனில் வெளிவரக்கூடிய கைது வாரண்டை பிறப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் அமைச்சர் ராசா, உள்துறை அமைச்சர் சிதம்பரம் ஆகியோர்மீது ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி வருபவர் சுப்பிரமணிய சுவாமி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: