தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.10.12

இஸ்லாத்தை விமர்சித்தமைக்காக வங்காளதேசத்தில் புத்த மதக் கோயில்கள், வீடுகள் எரிப்பு


வங்காளதேசத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிளர்ச்சி யாளர்களால் குறைந்தது நான்கு புத்த மதக் கோயி ல்களும் 15 பௌத்த மக்களின் வீடுகளும் எரிக்கப் ப ட்டுள்ளன.இச் சம்பவத்துக்குப் பின்னணியாக ஒரு பௌத்த நபர் இஸ்லாம் சமயத்தை அவமதிக்கும் வி தத்தில் பேசியமை என போலிஸும் குடிமக்களும் தெரிவித்துள்ளனர்.இவ்விவாகரம் தொடர்பாக தென் மேற்கு வங்காள தேசத்தில் உள்ள 'கோக்ஸ் பஷார்' எனும் பகுதியில் வாழும் சிறுபான்மை பௌத்தர்க ளின் குழு கருத்து தெரிவி
க்கையில் பௌத்தர்கள் தான் என உறுதிப் படுத்த முடியாத இனம் தெரியாத சில மர்ம மனிதர்களின் செயலே இந்த மோசமான பின் விளைவை ஏற்படுத்தியுள்ளது எனவும் இவர்களின் நோக்கம் வங்காளதேசத்தில் வாழும் முஸ்லிம் மற்றும் பௌத்த மக்களின் அமைதியான நல்லிணக்கத்துக்கு பங்கம் விளைவிப்பதே எனவும் கூறியுள்ளனர்.

மேலும் இந்த மர்ம மனிதர்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட இஸ்லாமிய மதத்துக்கு அவப்பெயரைச் சூட்டும் புகைப்படம் தான் அங்குள்ள முஸ்லிம் மக்களைக் கொந்தளிக்கச் செய்து சனி மாலை அவர்கள் ஆர்ப்பாட்டம் நிகழ்த்தக் காரணமாக உள்ளது எனவும் கருதப்படுகின்றது.

இதேவேளை வங்காளதேச போலிசார் கலவரம் நடந்த பகுதிகளில் பாதுகாப்புப் படை குவிக்கப் பட்டு அமைதி காக்கும் பணிகள் முடுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கலிபோர்னியாவில் தயாரிக்கப் பட்டு இணையத்தளத்தில் பிரபலமான இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் திரைப்படத்தை முன்னிட்டும் வங்காள தேச முஸ்லிம்கள் கொதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: