தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.12.12

நான் ஜாதிவெறியன் தான். டாக்டர் ராமதாஸ்


நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். உளுந்தூர்பேட்டை தாலுகா திருநாவலூரில் நடந்த திருமண விழா ஒன்றில்  கலந்துகொண்டு பேசிய அவர்,"நான் டாக்டருக்கு படித்ததில் இருந்து,டாக்டராக வேலை  பார்த்ததில் இருந்து வன்னியர் சங்க காலத்தில் இருந்து, பாமக தொடங்கியப் பின்னர் வரை நான் ஜாதிவெறியன் தான். என் மக்கள் முன்னேற வேண்டும்...படிக்க வேண்டும்...

வேலைக்கு போக  வேண்டும்...3 வேளை வயிறார சாப்பிட வேண்டும் என நினைப்பவன் ராமதாஸ்  மட்டும்தான்.

அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை வன்னியர்களுக்காக குரல் கொடுப்பவர்  ராமதாஸ் மட்டுமே. மழை, வெயில் பார்க்காமல் உழைப்பவர்கள் வன்னியர்கள்.  நம்மைக் கண்டால் யாருக்கும் பிடிக்கவில்லை. தீப்பந்தம் எடுத்துச் சென்று  கொளுத்துவதாக பிரசாரம் செய்கிறார்கள். நமது கைகளை வெட்டுவதாக கூறுகிறார்கள்.

நாம் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னால் உன் பெண்ணை கொடுக்கின்றாயா  என்று கூறுகிறார்கள். நமது பெண்களுக்கு காதல் வலை வீசி கடத்தி செல்கிறார்கள்.  பெண்ணை பெற்றவர்கள் உஷாராக இருக்க வேண்டும்.படிக்க வைக்கும் போது  யாரையாவது துணைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.நல்ல அறிவுரை சொல்லுங்கள்.


 விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகாவில் உள்ள வன்னியர்கள் ஒட்டு  மொத்தமாக மாம்பழத்திற்கு தான் ஓட்டுப்போட வேண்டும் என்ற முடிவுக்கு வாருங்கள்.  இரட்டை இலை, சூரியன்,கைக்கு போட்டால் நமக்கு நாமே அழித்துக் கொள்வதாகும்.  வன்னியன் மாம்பழத்திற்கு ஓட்டுப்போடுங்கள்.அதிமுக,திமுகவில் உள்ள  வன்னியர்களுடன் பேசுங்கள் ராமதாஸ் இருக்கும் போது வன்னியர் ஆட்சி வரவேண்டும்.

வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் நாம் ஆளலாம். தெருவுக்கு தெரு,  வீட்டுக்கு வீடு அக்னிசட்டி மஞ்சள் கொடி பறக்க வேண்டும். விழுப்புரம் தொகுதியில்  வரும் எம்.பி., தேர்தலில் நாம் ஒற்றுமையாக வாக்களித்தால் வெற்றி பெறலாம்.  2016ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11  சட்டமன்ற தொகுதி களிலும் அப்படியே வெற்றி பெறுவோம்" என்றார்.

0 கருத்துகள்: