தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.12.12

நீண்ட கால வறட்சி காரணமாக மடிந்த சுமேரியர்களின் மொழி - ஆய்வில் தகவல்


சுமார் 4200 வருடங்களுக்கு முன்னர் பூமியில் செழி த்திருந்த உன்னத நாகரிகங்களில் ஒன்றான சுமேரி ய நாகரிகமும் அவர்கள் பேசிய மொழியும் முற்றாக அழிவடைந்ததற்கு சுமார் 200 வருடங்களுக்கு மே லாக நிலவிய கடும் வறட்சியே காரணம் என புவியி யல் ஆய்வாளர்கள் சமீபத்தில் சான் பிரான்ஸிஸ் கோவில் ஊடகங்களுக்குத்
தெரிவித்துள்ளனர்.இந்நாகரிகம் தொடர்பாக இது வரை வரையப்பட்ட எந்த ஆவணத்திலும் சுமேரியர்களின் அழிவுக்கு நீண்ட கால வறட்சி தான் காரணம் என வெளிப்படையாகத் தெரிவிக்கப் படாத போ தும் சில மறைமுகமான சான்றுகளாக தொல்பொருள் மற்றும் புவியியல் குறிப்புக்கள் சுமேரிய நாகரிகம் கடும் வறட்சி காரணமாகப் படிப்படியாக சரிவடைந்தது எனச் சுட்டுகின்றன. இச்சான்றுகள் டிசம்பர் 3 ஆம் திகதி அமெரிக்காவின் புவிப் பௌதிகவியல் யூனியனின் வருடாந்த கூட்டத்தில் காட்சிப் படுத்தப் பட்டன.

கி.மி 3500 இல் உதயமான சுமேரிய நாகரிகம் இன்றைய ஈராக்கில் முன்னர் அமைந்திருந்த பண்டைய மெசொப்பொத்தாமியாவை மையம் கொண்டு வளர்ச்சியடைந்தது. பண்டைய சுமேரியர்களே முதன் முதலில் cuneiform எனப்படும் உருவங்களைக் கொண்டு எழுத்துக்களை உருவாக்கியவர்கள். மேலும் உலகின் முதல் சக்கரத்தையும், வில்லையும் உருவாக்கியவர்கள் இவர்களே. மேலும் இலக்கியத்துறையில் முதலாவது காவியக் கவிதையான 'Gilgamesh' உம் இவர்களால் தான் இயற்றப்பட்டது.

இவர்களின் நாகரிகமும் மொழியும் 200 தொடக்கம் 300 வருடங்களுக்கு எழுச்சி பெற்றிருந்தது. திடீரென நீண்ட கால வறட்சி காரணமாக 4000 வருடங்களுக்கு முன்னர் முற்றாக அழிந்து விட்டது. தற்போது இந்த அழிவுக்குக் காரணமாகக் கருதப்பட்ட காலநிலை மாற்றம் இன்றைய நவீன நாகரீகங்களையும் தாக்கி அழிக்கக் கூடிய வாய்ப்புக்களும் உள்ளன என்பதை மறுக்க முடியாது என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: