தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.12

மீண்டும் கிளர்ந்தெழுந்த எகிப்தியர்கள் : அதிபர் மாளிகையிலிருந்து வெளியேறினார் மோர்ஸி


எகிப்து தலைநகர் கெய்ரோவில், அதிபர் மாளிகை யை சுற்றிவளைத்து நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தி னால், பாதுகாப்பு கருதி எகிப்து அதிபர் மோர்ஸி அதி பர் மாளிகையிலிருந்து வெளியேறியுள்ளார்.எகிப்தி ன் முன்னாள் அதிபர் முபாரக் ஆட்சியிலிருந்து கீழி றக்கப்பட்ட பின்னர், தேர்தல் மூலம் புதிய அதிபராக மோர்ஸி தெரிவானார்.
எனினும் அவர் அறிமுகப்படு த்தியுள்ள புதிய சட்டத்திருத்தம்,
  சட்டவிதிகளிலிருந்து அதிபருக்கு விதிவில க்கு அளிக்க வகை செய்வதுடன், சர்வாதிகாரத்தையும் அதிபருக்கே வழங்க சந் தர்ப்பம் அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதே போன்றே முபாரக்கும் அதிகாரத்தை தன்வசம் வைத்திருந்தால் 30 வருடங்கள் அவரது ஆட்சியின் கீழ் ஏமாந்து போன அடிமைகளாக இருந்துவிட்டோம். இனிமேலும் அவ்வாறு முடியாது என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலவரத்தை அடக்குவதற்காக காவல்துறையினர் கண்ணீர் புகை வீச்சு பிரயோகம் மேற்கொண்டுள்னர். மேலும், அதிபர் மாளிகையை சுற்றி முட்கம்பி பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.  எனினும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட்டத்தை தீவிரமாக்கியதை தொடர்ந்து, அதிபர் மாளிகையின் அருகில் வருவதற்கு அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் பதற்ற சூழ்நிலை உருவாகிய போதும்,  உயிரிழப்புக்கள் அற்ற வன்முறைகளே இடம்பெற்றுள்ளன.  சுமார் 18 க்கு மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 'எம்மால் பேசமுடியாது. பேசுவதற்குரிய நீதிமன்றம் இப்போது இல்லை. சுதந்திர நீதித்துறை இங்கு இயங்கவில்லை' என ஆர்ப்பாட்டகாரர்களில் ஒருவர் ராய்டருக்கு தெரிவித்துள்ளார்.

'புதிய அரசியலமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படும் வரைதான் தனக்கு அதிகாரம் இருக்கும்' என மோர்ஸி தெரிவித்துள்ள போதும் மக்கள் இதை நம்பத்தயாரில்லை என கூறியுள்ளனர்.

எகிப்தின் இரண்டாவவது பெரிய நகரமான அலெக்ஸாண்ட்ரியாவிலும் மக்கள் போராட்டம் நடைபெற்றுள்ளது. மோர்ஸியின் இந்நடவடிக்கை அவரது ஆதரவாளர்களுகும் ஆத்திரமூட்டியுள்ளது. நாட்டின் பல செய்தி ஊடக நிறுவனங்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அவை நேற்றைய தமது வெளியீட்டில் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெற்றிடடமாக  பதிவிட்டு தமது எதிர்ப்பை காட்டியுள்ளன. நாட்டின் ஊடக சுதந்திரமும் இல்லை என அவை வலியுறுத்தியுள்ளன.

0 கருத்துகள்: