தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.12

சீனாவில் குரங்கு கறி சப்ளை செய்த 2 ஓட்டல்களுக்கு அதிரடியாக சீல் வைத்த அதிகாரிகள்.


சீனாவில் குரங்கு கறியை சப்ளை செய்த 2 ஓட்டல்களை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர். சீனாவில் நாய் கறிகளை விற்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்நிலையில், ஜியாங்ஜி மாகாணத்தில் குரங்கு கறிகளை விற்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பரபரப்பாக டிவியிலும் செய்திகள் ஒளிபரப்பாயின.இதையடுத்து உயர் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஜிக்ஸி கவுன்டியில் உள்ள 2 ஓட்டல்களில் குரங்கு குட்டிகளின் கறிகளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓட்டலில் சோதனை நடத்திய போது, காட்டு பன்றியின் இறைச்சி, கரடி, எலிகள், பாம்புகளை கைப்பற்றினர். மேலும், வனப் பகுதிகளில் விலங்குகளை பிடிக்க வைத்திருந்த கூண்டுகள், வேட்டையாட பயன்படுத்தும் துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.
அத்துடன் வன விலங்குகளை வேட்டையாடுவதை தடுக்காமல் அலட்சியமாக செயல்பட்ட ஜிக்ஸி கவுன்சடி வனத்துறை இயக்குனர் உள்பட 4 பேரை பணியில் நீக்கப்பட்டனர்.  விசாரணையில் ஒரு பிளேட் குரங்கு கறி ரூ.3000க்கும் குரங்கு மூளை கறி ரூ.3,500க்கும் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

0 கருத்துகள்: