தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.12.12

தமிழகத்துக்கு வினாடிக்கு 10 ஆயிரம் டிஎம்சி நீர் திறந்து விட வேண்டும் : உச்சநீதி மன்றம்


இன்று முதல் எதிர் வரும் ஞாயிறு முதல் தமிழகத் துக்கு கர்நாடகம் காவிரியிலிருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.தமிழக அரசி ன் மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. விசாரணையை ஏற்று தீர்ப்பு கூறி ய நீதிபதிகள் டி .கே ஜெயின், மற்றும் லோக்நாத் த லைமையிலான குழு, தமிழகத்துக்கு இன்று முதல் வரும் ஞாயிறு வரை  தின
மும் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடிநீர் திறந்து விட வேண்டும். எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று காவிரி நதிநீர் ஆணையத்தை க் கூட்டி, அடுத்து எவ்வளவு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என முடிவெடுக்க ட்டும் என்று உத்தரவிட்டனர். எதிர்வரும் திங்கட் கிழமை உச்சநீதி மன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

அதோடு 1991இல் ஆரம்பித்த காவிரி நதிநீர் நடுவர் நீதிமன்றத்தின் ஆணையாக 2006 இல் வெளிவந்த தீர்ப்பை ஏன் மத்திய அரசு தனது இதழில் வெளியிடவில்லை என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு பதில் அளித்து மத்திய அரசு சார்பாக வாதாடிய வழக்கறிஞர் தமிழகம்,  புதுவை, கேரளா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்கள் தாக்கல் செய்திருக்கும் மேன்முறையீட்டு வழக்கு நிலுவையில் உள்ளதால், அரசு இதழில் இந்த ஆணை வெளியாகவில்லை என்றார். எனினும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறிய நீதிபதிகள், மத்திய அரசு இதழில் தீர்ப்பை வெளியிட தடையேதும் விதிக்கப்படவில்லை. நடுவர் நீதிமன்றத்தின் ஆணைக்கும் தடையேதும் விதிக்கப்படவில்லை. அப்படியிருக்க அரசு இதழில் ஏன் வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினர். மேலும் எப்போது அரசு இதழில் வெளியிடப்படும் என நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறினர்.

0 கருத்துகள்: