தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.11.12

செவ்வாயில் அதிகமான தூசுப் புயல் - கியூரியோசிட்டி செயலிழக்கும் அபாயம்?


செவ்வாய்க் கிரகத்தில் ஆக்ஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வந்திறங்கிய கியூரியோசிட்டி ரோவர் விண்வண்டி அங்கு நுண்ணுயிர் வாழ்க்கைக்கு ஆதாரம் இருக்கிற தா என அறிவதை முக்கிய நோக்காகக் கொண்டு அ ங்குள்ள மண் பாறை மாதிரிகளை ஆராய்ந்து வருகி ன்றது.இந்த ரோபோட்டிக் விண்கலம் கடந்த 10 ஆம் திகதி அங்கு வீசத் தொடங்கிய பாரிய தூசுப் புயலை ப் படம் பிடித்து பூமிக்குஅனுப்பியுள்ளது. பூமியில் உள்ள பாலைவனங்களைப் போலவே தாவரங்களும் விலங்குகளும் அற்ற செவ்வாயின் பெரும்பாலான தரை மேற்பரப்புக்களில்
அவ்வப்போது பாரிய புழுதிப் புயல்கள் எழுவதும் அடங்குவதும் வழமை. ஆனால் அவை எதிர்பாராத விதத்தில் தோன்றுவதும் திடீரென காணாமற் போவதும் ஏன் என்பது விஞ்ஞானிகளுக்குப் புதிரான விடயமாகும். மேலும் கடந்த 16 ஆம் திகதி செவ்வாயின் வெப்பநிலையும் திடீரென 25 டிகிரி அதிகரித்துள்ளது எனவும் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இதேவேளை சில வாரங்களுக்கு முன்னர் செவ்வாயில் தோன்றிய இந்தப் புழுதிப் புயல் நிற்காமல் தொடர்ந்தால் அது கியூரியோசிட்டி விண்வண்டியின் செயற்பாட்டைப் பாதிக்கும் எனவும் விண்வெளியியலாளர்கள் கூறுகின்றனர்.

அது எவ்வாறு எனில் மிக அதிக உயரத்துக்கு எழும் புழுதி கியூரியோசிட்டி இயங்கத் தேவையான சூரிய ஒளியைத் தடுக்கும். மேலும் இந்த ரோபோட்டின் சூரியப் படல்களில் இப் புழுதி படிந்தாலும் அதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போகும். கியூரியோசிட்டி விண்வண்டி செவ்வாயில் குறைந்தது 2 ஆண்டுகள் ஆய்வு செய்யும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

0 கருத்துகள்: