தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.11.12

பாலஸ்தீனம் ஐ.நாவில் தனி அந்தஸ்த்து பெற மேலும் இரண்டு தினங்கள்


பாலஸ்தீனா என்ற நாட்டை ஐ.நாவில் தனி நாடாக அங்கீகரிக்கும் பிரேரணைக்கான வாக்கெடுப்பு வரு ம் வியாழன் (29.11.2012) வரவிருக்கிறது.கடந்த எட்டு த்தினங்களாக இஸ்ரேல் செய்த மடைத்தனமானவே லைகள் பாலஸ்தீனருக்கான சர்வதேச ஆதரவை மேலும் ஒரு படி உயர்த்தியுள்ளது.பெருவாரியான அ தரவுடன் ஐ.நாவில் இந்தப் பிரேரணை வெற்றி பெறு ம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் இதுவரை வாய் வீரம் பேசிய
டென்மார்க் என்ன செய்யப்போகி றது என்பது முக்கிய கேள்வியாகியுள்ளது.
இந்த வாக்களிப்பில் கருத்தெதுவும் தெரிவிக்காது வெறும் வெள்ளைக்கடதாசி வாக்களிப்பிற்குள் போய் அமெரிக்காவை திருப்திப்படுத்த டென்மார்க் முயலலாம் என்று கருதப்படுகிறது.
டென்மார்க் இப்படியான ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்று டென்மார்க் வெளிநாட்டு அமைச்சர் வில்லி சுவிண்டேலுக்கு அவருடைய சொந்தக் கட்சியான எஸ்.எப்.பிற்குள் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
பெரும்பாலும் இந்தச் சோகமான முடிவுக்குள் டென்மார்க் போகாது என்றே கருதப்படுகிறது.
இதற்குள் பாலஸ்தீனம் தான் ஒரு தனிநாடு என்ற காட்சியை இன்று காஸா வட்டகையில் காண்பிக்க ஆரம்பித்துள்ளது.
அதன் ஓரங்கமாக தற்போது காஸா – இஸ்ரேல் எல்லைப்பகுதி முழுவதும் ஹமாஸ் அமைப்பு பாலஸ்தீன போலீசாரை எல்லைக் காவலுக்கு நிறுத்தியுள்ளது.
எட்டுத் தினங்கள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனர் ஒருவரைச் சுட்டுக்கொன்று 19 பேரை காயப்படுத்தியுள்ளது இஸ்ரேல், இதை கண்காணிக்க பாலஸ்தீன போலீசார் நிறுத்தப்படுகிறார்கள்.
ஆக இஸ்ரேல் என்ற ஆக்கிரமிப்பாளன் தமது நாட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காக போடப்படும் இந்தக் கரையோரக் காவல் பாலஸ்தீனாவை இன்றே மலரச் செய்துள்ளது.
இதுபோன்ற சிக்கல் வரும் என்பதற்காகவே சிறீலங்கா தமிழருக்கான தீர்வில் போலீஸ் அதிகாரத்தை வழங்க மறுக்கிறது, தமிழரை போலீசிலும், இராணுவத்திலும் ஏமாற்றியாவது சேர்த்துவிட வேண்டுமெனத் துடிக்கிறது.
பாலஸ்தீனத்தில் ஏற்படும் இந்த மாற்றம் சிறீலங்காவில் பிரதிபலிக்கும் சிங்கள இனவாத அரசுக்கும் இஸ்ரேலைப் போல இது நெருக்கடியான காலமே.
என்று தம்மை சிங்கள ஆட்சி ஏமாற்றிவிட்டதாக ஐ.நா அறிக்கை விட்டதோ அன்றே சிறீலங்காவின் தலையில் மண் விழுந்துவிட்டது.
அமெரிக்கா சென்றுள்ள ராஜபக்ஷ மந்திரித்து விடப்படுவதைத் தவிர புதிதாக எதுவும் நடைபெற வழியில்லை காரணம் பாலஸ்தீனம், பர்மாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்போல சிறீலங்காவும் மாறவேண்டிய பருவம் வந்துவிட்டதையே சர்வதேச நிகழ்வுகள் கோடி காட்டுகின்றன.
இது இவ்விதமிருக்க எதிர்வரும் டிசம்பர் 16ம் திகதி இத்தாலிய பி.டி.எல் கட்சியின் தலைவர் தேர்வு இடம் பெறவுள்ளது, இதில் போட்டியிட எண்ணமுள்ளதாக முன்னாள் இத்தாலிய பிரதமர் சில்வியோ பலர்ஸ்கோனி தெரிவித்தார்.
வரும் மார்ச் மாதமளவில் இத்தாலிய பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது, பி.டி.எல் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் பலர்ஸ்கோனி பிரதமர் பதவியை மறுபடியும் குறி வைப்பார்.
ஊழல் – பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் இத்தாலியின் பொருளியல் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வல்லமை உள்ள தலைவர் என்ற சிறப்பை இவர் இன்னமும் இழந்துவிடவில்லை.
இத்தாலியின் பாரிய பணக்காரராக இவர் இன்றும் வலம் வருகிறார், ஒரு புறம் சிறைச்சாலை கம்பிகள் இவரை விரட்ட மறுபுறம் ஆட்சிக்கட்டிலில் இருப்பதே பாதுகாப்பு என்ற நிலைக்கு அவர் வந்துள்ளமை தெரிகிறது.

0 கருத்துகள்: