எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என, சீன அரசு எச்சரித்துள்ளது.சீனாவில், எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்கள், ஏழு லட்சம் பேர் உள்ளனர். டியான்ஜின் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்தகாரணத்துக்காக, அவருக்கு, நுரையீரல் புற்று நோய் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவமனையும் முன் வரவில்லை.
இது குறித்து, அவர் சீன அரசிடம் முறையிட்டார்.இதையடுத்து, சீன அரசு, புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.சீன அரசின் உத்தரவில் கூறியிருப்பதாவது:எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, எந்த மருத்துவமனையும், சிகிச்சை அளிக்க தயங்கக்கூடாது. தட்டி கழிக்கும் நோக்கில் மற்ற மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யக்கூடாது.உண்மையிலேயே, போதிய வசதியில்லாத மருத்துவமனைகள், எய்ட்ஸ் நோயாளிகளை மற்ற மருத்துவமனைக்கு பரிந்துரைக்கலாம். மற்றபடி, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை, அனைத்து மருத்துவமனைகளும் வழங்க வேண்டும்.இதை செய்யாத பட்சத்தில், அந்த மருத்துவமனைகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, மூடப்படும்.இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக