தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.10.12

கேஸ் சிலிண்டர் விலை திடீர் உயர்வு-மத்திய அரசு அறிவிப்பு!


சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை கூடுதலாக ரூ.11.42 உயர்த்தப்பட்டுள்ளதாக இன்று மத்திய அரசு அறிவித்துள்ளது.அந்நிய முதலீட்டுக்கு அனுமதி, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை தொடர்ந்து இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. கேஸ் சிலிண்டர் டீலர்களுக்கு 14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டர் மீதான கமிஷனை ரூ.25.83-இல் இருந்து 37.25 ஆக உயர்த்துவதற்கான உத்தரவுகளை பெட்ரோலிய அமைச்சகம் பிறப்பித்திருந்தது இதன்மூலம் புதுடெல்லியில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.410.42 ஆக உயர்த்துள்ளது.
சென்னையில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.398 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் மானியம் அல்லாத சிலிண்டர்களுக்கான கமிஷன் ரூ.12.17ல் இருந்து ரூ.38 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

0 கருத்துகள்: