தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.10.12

பிபிசி ஊடகவியலாளரின் போர்க்குற்றச்சாட்டுக்களை மறுக்கும் இலங்கை இராணுவம்


பிபிசி செய்தி நிறுவனத்தின் முன்னாள் ஊடகவிய லாளர் பிரின்சஸ் ஹரிசனின் போர்க்குற்றச்சாட்டுக் களை இலங்கை இராணுவம் மறுத்துள்ளது.வன்னி போரின் போது, படையினர் பாரிய போர்க்குற்றங்க ளை புரிந்ததாகவும், வன்னி வைத்தியசாலையில் க டமையாற்றிய நிரோஸ் என்பவர் இதற்குரிய தகவ ல்களை தமக்கு வழங்கியதாகவும் பிரின்சஸ் ஹரி சன் தெரிவித்திருந்தார்.எனினும் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் வன்னி
பகுதியில் இவ்வாறான பெயரை கொண்ட எந்தவொ ரு வைத்தியரும் கடமையாற்றவில்லை எனவும் குறித்த போர்க்குற்றச்சாட் டுக்களுக்கு ஆதாரம் எதுவும் இல்லை எனவும் இராணுவம் தெரிவித்துள்ளதாக திவயின செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பிரின்சஸ் ஹரிசன் இலங்கையை விட்டு செல்வதற்கு முன்னர் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடத்திய விருந்துபச்சார நிகழ்வில் புலித்தேவனுக்கு அழைப்பு விடுத்திருந்ததாக இராணுவ புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி திவயின மேலும் தெரிவித்துள்ளது.

இறுதி யுத்த காலப்பகுதியின் வன்னி இராணுவ நடவடிக்கை தொடங்கப்படும் முன்னர் பிரின்சஸ் ஹரிசன் இலங்கையை விட்டு வெளியேறியிருந்தார்.

0 கருத்துகள்: