தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

2.10.12

அமெரிக்க ஆதரவாளர்களின் கைகளில் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம்


நபிகள் பெருமானாரை அவமதிக்கும் திரைப்படத்தி ற்கு எதிராக உலகம் கொந்தளித்தது. மக்களின் கோ பம் ஆத்திர அலைகளாக வெடித்தது.. சில இடங்களி ல் அசம்பாவிதங்களும் நடைபெற்றன.எதிர்ப்பினை ஆர்ப்பாட்டங்கள் வாயிலாக வெளிப்படுத்துவது ஒ ரு போராட்ட முறை.குறுக்கு புத்தி படைத்த மூடர்க ள் திருத்தப்பட முடியாத நிலையில் இருப்பவர்களை சட்டத்தின் மூலமாக கடுமையான நடவடிக்கைகளி ன் மூலம்
திருத்துவது ஒருவகை .அதேவேளையில் அறியாமையில் இருப்பவர்
களை திருத்துவதற்கு அழகிய முறையில்அழைப்பு பணி மூலம் தெளிவடைய வைப்பது மற்றொரு வகை.இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக தலைநகர் டெல்லியில் அமெரிக்க தூதரக அலுவலகம் நூலகம் உள்ளிட்டவை அமைந்துள்ள 




அமெரிக்க மையத்தின் முகப்பு வாயிலில் சமுதாய ஆர்வலர்கள் சிலர் உலக வழிகாட்டி தூயவர் நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தை அமெரிக்க தூதரக அதிகாரிகள் , ஊழியர்கள், மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர் அரைமணி நேரத்தில் 125 புத்தகப்பிரதிகள் அன்பளிப்பாக வழங்கியதாகஹுதை ஹித்மத்கர் அமைப்பின் நிர்வாகி பைசல் கான் தெரிவித்தார்.

0 கருத்துகள்: