தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

27.10.12

தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு மரணதண்டனை. ரஷ்யாவின் புதிய சட்டத்தால் ஐரோப்பிய யூனியன் அலறல்.

ஆசியாவின் மிகப்பெரிய நாடான ரஷ்யா, நாட்டுத் துரோகம் மற்றும் சதித்திட்டத்திற்கு எதிராக புதியச் சட்டத்தினை தனது கீழ் சபையில் நிறைவேற்றியுள் ளது. மேல் சபையில் நிறைவேரவுள்ள இந்த புதிய ச ட்டம் கிடைக்கும் சாட்சிகளை பொறுத்து, மரணதண் டனையோ அல்லது அதற்கேற்ற தண்டனையோ வ ழங்கும் என்று விளக்கம் அளிக்கிறது.இந்த சட்டம் கு றித்து ஐரோப்பிய யூனியன் கவலை தெரிவித்து அறி க்கை வெளியிட்டுருப்பதாவது:-இந்த நாட்டுத்துரோ க சட்டத்தில் சொல்லப்பட்டுள்ளபடி தண்டனை வழங்குவது
என்பது கொஞ்சம் கடினமாக இருக்கும். சதித்திட்டத்தில் ஈடுபடும்
வெளிநாட்டவரை அந்த சட்டம் 20 வருடங்கள் வரை கடுமையாக தண்டிக்க வழிவகுக்கிறது. புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனெக்கூறி அதிபர் புதினுக்கு எதிராக அங்குள்ள சமூக ஆர்வளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த சட்டம் பன்னாட்டு பொதுமன்னிப்பு நிறுவனம் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவற்றுடனான செய்திப் பறிமாற்றத்தையும் குற்றமாக்க முடியும் என்று அது சொல்கிறது.

ரஷ்யாவின் தற்போதைய சட்ட மற்றும் நீதிமன்ற விதிமுறைகள் படி, இது பொதுமக்களின் முன்னேற்றத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு மன அழுத்தத்தை அதிமாக்கும். இந்த சட்டத்தை மேல் சபையில் நிறைவேற்ற வேண்டி எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை ஐரோப்பிய யூனியன் கூர்ந்து கவனித்து வருகிறது. வெளிநாட்டு நிறுவனங்களுடன் நிதித் தொடர்பு வைத்துள்ளவர்களை குற்றவாளிகள் என்றும் நாட்டுக்கு எதிராக செய்திகள் வெளியிடும் வலைதளங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறுகிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: