தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.10.12

அமெரிக்காவில் எச்-1பி விசா, கிரீன் கார்டு வழங்க புதிய திட்டம்


அமெரிக்காவில் பணியாற்ற விரும்புவோருக்கு எச்-1பி விசா வழங்க ரூ. 5 லட்சமும், நிரந்தரமான குடியுரிமை பெற விரும்புவோருக்கு கிரீன் கார்டு வழங்க ரூ. 7.8 லட்சமும் கட்டணமாக வசூலிக்கும் யோசனையை பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.இந்தத் தொகையை சம்பந்தப்பட்ட ஊழியரை வேலையில் அமர்த்தும் நிறுவனம் வழங்க வேண்டியதிருக்கும். மைக்ரோசாஃப்ட் வெளியிட்ட "தேசிய திறன் மேம்பா ட்டுத் திட்டம்' தொடர்பான அறிக்கையில் கூறியிருப்பதாவது:÷திறன்மிகுந்த ஊழியர்களை வேலையில்

அமர்த்த விரும்பும் நிறுவனங்கள், அதற்குரிய கட்டணத்தை அரசுக்கு செலுத்தும் வகையில் திட்டம் கொண்டு வர வேண்டும். இந்த வகையில் ஆண்டுதோறும் 20,000 எச்-1பி விசாவை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியில் சேர்த்துக்கொள்ளப்படும் ஊழியர் அமெரிக்காவில் பட்டம் பெற்றவராகவோ, வெளிநாடுகளில் அமெரிக்கப் பட்டப்படிப்புக்கு இணையான பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
ஒரு எச்-1பி விசாவுக்கு அனுமதியளிக்க 10,000 அமெரிக்க டாலரை (சுமார் ரூ. 5 லட்சம்) நிறுவனங்களிடமிருந்து அரசு பெற்றுக்கொள்ளலாம். நிரந்தரக் குடியுரிமை அல்லது கிரீன் கார்டு அளிக்க 15,000 அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 7.8 லட்சம் கட்டணம் வசூலிக்கலாம்.
இதன் மூலம் திரட்டப்படும் நிதியை, அமெரிக்க பள்ளிகளில் கணினி பயிற்சி அளிப்பதற்கும், உயர் கல்வியில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணக்கு ஆகிய பாடங்களில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்கும் பயன்படுத்தலாம்; ஆராய்ச்சிப் படிப்புகளுக்கும் செலவிடலாம். இதன் மூலம் திறன்மிகுந்த பணியாளர்களை இன்னும் சில ஆண்டுகளில் அமெரிக்காவிலேயே உருவாக்க முடியும்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை அமெரிக்க நாடாளுமன்றம் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மைக்ரோசாஃப்ட் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த யோசனையை அமெரிக்க அரசு ஏற்றுக்கொண்டால், இந்தியர்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆண்டுதோறும் பிற வெளிநாட்டவர்களைவிட இந்தியர்கள்தான் அதிக எண்ணிக்கையில் எச்-1பி விசாவைப் பெறுகின்றனர்.
திட்ட அறிக்கை குறித்து புரூக்கிங்ஸ் கல்வி மையத்தில் சமீபத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் மைக்ரோசாஃப்ட்டின் துணை செயல் தலைவர் (சட்டம், நிறுவனங்கள் விவகாரம்) பிரட் ஸ்மித் கூறியது:÷""மைக்ரோசாஃப்ட்டில் 6,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் 3,400 பணியிடங்கள் ஆராய்ச்சி, மேம்பாடு, பொறியியல் துறை தொடர்பானவை. இப்பணியிடங்களுக்குத் தேவைப்படும் திறன் மிக்க பணியாளர்கள் அமெரிக்காவில் போதிய எண்ணிக்கையில் இல்லை.
இந்நிலையை மாற்றவும், தேவையான திறன்மிக்க பணியாளர்களை வெளிநாடுகளிலிருந்து அழைப்பதற்கும் வசதியாக இத்திட்டத்தை அரசு பரிசீலிக்க வேண்டும்'' என்றார்.

0 கருத்துகள்: