தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.12

கூட்டு ஒப்பந்தங்களில் கைச்சாத்திடும் ஈரானும் வடகொரியாவும்


ஈரானும் வடகொரியாவும் விஞ்ஞான மற்றும் தொ ழிநுட்பக் கூட்டுறவு அபிவிருத்திக்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டிருப்பதாக தகவல் வெளியா கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஈரா னின் ஆன்மீகத் தலைவரான அயதுல்லா கொமேனி யும், இரு நாடுகளுமே தமக்குப் பொதுவான எதிரிக  ளைக் கொண்டிருப்பதாக சாடியுள்ளார்.ILNA செய்தி ஊடகம்  இது பற்றிக் கூறுகையில் இரு நாடுகளும் ஒன்றிணைந்து ஆராய்ச்சி,
கல்வி அளிப்பு, இணைந்த ஆய்வு கூடங்கள், மற்று ம் தகவல் தொழிநுட்பம்,உயிரியல், புதிய முறையிலான சக்தி பயன்பாடு (rene wable energy), சுற்றுச்சூழல், விவசாயம் உணவு மற்றும் அபிவிருத்தி ஆகிய விட யங்களில் இணைந்து செயற்படவுள்ள தீர்மானித்துள்ளதாகவும், இந்த ஒப்பந் தத்தில் ஈரானின் விஞ்ஞானம், ஆராய்வு, மற்றும் தொழிநுட்பம் என்பவற்றுக் கான அமைச்சர் ஃபர்ஹாட் டனெஷ்ஜூவும் வடகொரியாவின் வெளிநாட்டுத் துறை அமைச்சர் பக் யி ச்சுன் உம் கைச்சாத்திட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ள து.

கடந்த சில வருடங்களாகவே வடகொரியா மற்றும் ஈரானுக்கிடையேயான உறவு நெருக்கமடைந்து வருவதாக அமெரிக்காவின் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர். 2010 ஆண்டு கசிந்த ஒரு தகவலின் படி கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய ஏவுகணைகளின் பாகங்களை வடகொரியாவிடம் இருந்து ஈரான் மிகவும் கஷ்டப்பட்டு வேண்டியதாகக் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்: