தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.9.12

ஈராக் மீது போர் தொடுத்த டோனி பிளேயர்,ஜார்ஜ் புஷ் இருவரும் போர்க்குற்றவாளிகள்.


இராக் மீது போரைத் தொடுத்தற்காக பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளயரையும், அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷையும் த ஹேக்கில் இருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என தென்னாப்பிரிக்காவில் இனவெறி ஆட்சியை எதிர்த்துப் போராடிய பேராயர் டெஸ்மண்ட் டூட்டு கூறியுள்ளார்.அந்த இரு முன்னாள் தலைவர்களும் இராக்கில்

மனித பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக பொய் கூறியதாக டூட்டு அவர்கள் பிரிட்டிஷ் செய்திப் பத்திரிகை ஒன்றில் எழுதும் போது குற்றஞ்சாட்டினார்.
இதற்கு முன்னர் சரித்திரத்தில் நடந்த ஏனைய போர்களைவிட இராக் போர்தான் உலகை மிகவும் மோசமாக ஸ்திரமற்ற நிலைக்கு தள்ளியதாக அவர் கூறியுள்ளார்.

கடும் தாக்கு

முன்னோடி சமாதான செயற்பாட்டாளரும், இனவெறிக்கு எதிரான தனது நடவடிக்கைகளுக்கான அங்கீகாரமாக 1984 இல் நோபல் பரிசை வென்றவருமான பேராயர் டூட்டூ அவர்கள், இந்த வார முற்பகுதியில், பிளயர் அவர்களுடன் ஒரே மேடையில் அமர முடியாது என்று கூறி மறுத்து, ஜொஹன்னஸ்பேர்க்கில் ஒரு தலைமைத்துவ மாநாட்டில் இருந்து வெளியேறினார்.
சிரியாவில் ஏற்பட்டிருக்கும் உள்நாட்டு போருக்கான நிலைமைகள் மற்றும் இரானை மையமாகக் கொண்டு மத்திய கிழக்கில் ஏற்படக் கூடிய மத்திய கிழக்கு முறுகல்கள் ஆகியவற்றுக்கு, 2003 ஆம் ஆண்டில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் ஆகியவற்றின் தலைமையிலான சதாம் ஹுசைன் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளே வழி செய்துள்ளன என்றும் கேப் டவுனின் முன்னாள் பேராயரான டூட்டு அவர்கள் கூறியுள்ளார்.
அமெரிக்க மற்றும் பிரிட்டனின் இந்த முன்னாள் தலைவர்கள் தாம் அடாவடித்தனங்களை செய்வதற்காக பொய்யாக காரணங்களை தாங்களே உருவாக்கி சொன்னதுடன், மக்கள் அதிகம் பிளவுபடவும் வழிசெய்துவிட்டார்கள் என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிளயர் பதில்

டூட்டு அவர்களின் கட்டுரைக்கு கடுமையான வார்த்தைகளுடன் பிளயர் அவர்கள் பதிலளித்துள்ளார்.
உளவுத்தகவல்கள் குறித்து நாங்கள் பொய் சொன்னோம் என்று கூறிகின்ற அந்த பழைய அடிப்படையில்லாத வாதம் தவறானது என்பதை ஆதாரங்கள் குறித்த அனைத்து சுயாதீன ஆய்வுகளும் காட்டியுள்ளன என்றும் பிளயர் கூறியுள்ளார்.
இது குறித்து பல தடவைகள் விவாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இப்போது அது குறித்து புதிதாகக் கூறுவதற்கு எதுவும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
அத்துடன் பிரச்சினைகள் பல இருக்கின்ற போதிலும், இராக் தற்போது மூன்று மடங்கு பெரிதான பொருளாதாரத்தை பெற்றிருப்பதுடன், அங்கு குழந்தைகளின் இறப்பு வீதமும் மூன்றில் ஒரு மடங்கால் குறைந்திருக்கிறது என்றும், பஸ்ரா போன்ற இடங்களில் முதலீடுகள் பெரிதும் அதிகரித்திருக்கின்றன என்றும் பிளயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே, இராக் போரை ஒரு சட்டவிரோத வலிந்து ஈர்க்கப்பட்ட போர் என்று கூறியிருக்கும் மனித உரிமைகள் சட்டத்தரணியான சர் ஜெஃரி பைண்ட்மன் அவர்கள், இது குறித்து ஒரு போர் குற்றவியல் வழக்கு நடத்தப்பட முடியும் என்றும், அது நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 கருத்துகள்: