தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

17.8.12

எங்கள்மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கடுமையாக இருக்கும் இஸ்ரேலுக்கு ஈரான் எச்சரிக்கை


ஈரான் தற்போது அபிவிருத்தி செய்து வரும் அணுசக் தி திட்டங்களை எதிர்த்து அதன் அணு உலைகளைக் குறி வைத்துஇஸ்ரேல் ஏதும் தாக்குதல்களை மேற் கொண்டால் பதிலடியாக இஸ்ரேலின் முக்கிய நகர ங்களை நோக்கி தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு ஏவு கணைத் தாக்குதல்களை நிகழ்த்துவோம் எனவும் இ தன் மூலம் குறைந்தது 500 இஸ்ரேலியர்கள் பலியா வார்கள் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இவ்வாறான ஒரு சங்கட நிலமை
உருவாகு வதற்கு இஸ்ரேலின்
பிரதமரே பொறுப்பாவார் என்றும் ஈரான் கூறியுள்ளது. சமீப காலமாக தனது அணுசக்தித் திட்டங்களை அதிகளவு செறிவூட்டி வரும் ஈரான் சர்வதேச சமூகத்துக்கு இது மக்கள் தேவைக்காக என்றே கூறி வந்தது. இருந்த போதும் ஈரான் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய ஐரோப்பிய வலயத்தில் ஒரு சக்தி வாய்ந்த அணுவாயுதங்களைக் கொண்ட நாடாக மாறிவருகிறது என்றும் யுரேனியம் செறிவூட்டல் ஆயுத உற்பத்திக்கே எனவும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்குலக நாடுகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.

ஈரானில் இருந்து வெளிவரும் 'மாரிவ்' பத்திரிகைக்குப் பேட்டியளித்த ஈரானின் சீனாவுக்கான தூதுவர் 'மட்டன் வினை' 'இஸ்ரேலின் அழுத்தங்கள் காரணமாக ஈரானுடன் 30 நாட்கள் நீடிக்கக் கூடிய ஒரு சிறு யுத்தத்துக்கு அது முகம் கொடுக்க நேரிடும் எனவும் இதன் மூலம் மிக அதிகளவு உயிர்கள் பலியாகி இழப்புக்கள் ஏறபட வாய்ப்பில்லை என்பதால் பலியாகவுள்ள சில நூறு உயிர்களுக்கு மதிப்பு தராது இஸ்ரேல் யுத்தத்தில் இறங்க தயாராகவே உள்ளது' என்று கூறியுள்ளார்.

இதேவேளை செவ்வாய்க்கிழமை வாஷிங்டனில் இருந்து பத்திரிகையாளர்களுக்குப் பதிலளித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியொன் பனெட்டா 'இஸ்ரேல் இதுவரை ஈரானின் அணு உலைகளைத் தாக்குவதற்குத் திட்டமிடவில்லை எனவும் இஸ்ரேலின் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஈரானின் அணுத் திட்டத்தை அழிப்பதற்கு அல்ல எனவும் இதை அமெரிக்காவின் இராணுவ தலைமை அதிகாரி மார்ட்டின் டெம்ப்சேய் உம் உறுதிப் படுத்தியுள்ளார்' எனவும் கூறியிருக்கின்றார்.

0 கருத்துகள்: