தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.12

செவ்வாய் கிரகத்தில் இறாங்கிய ரோவர் விண்கலம், ஆராய்ச்சியை துவக்கி


செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட, "ரோவர் கியூரியாசிட்டி' விண்கலம், "லேசர்' ஒளிகற்றைகள் மூலம் பாறைகள் குறித்த ஆராய்ச்சியை துவக்கியுள்ளது. சூரியக் குடும்பத்தைச் சேர்ந்த செவ்வாய் கிரகம், பூமியிலிருந்து, 57 கோடி கி.மீ., தூரத்தில் உள்ளது.இந்த கிரகத்தைப் பற்றி மேலும் ஆராய, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ரோவர் விண்கலம் செலுத்தப்பட்டது. 250 கோடி டாலர் செலவில் இந்த விண்கலம்
தயாரித்து அனுப்பப்பட்டு, செவ்வாய் கிரகத்தில், 6ம்தேதி, தரையிறங்கியது.
ரோவர் விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த, "க்யூரியாசிட்டி' என்ற, ரோபோ வாகனம், செவ்வாயின் நிலப்பரப்பில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டமாக இந்த, "கியூரியாசிட்டி' செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை, ஸ்கேனர் கருவி மூலம் ஒளிகற்றைகளை ஊடுருவ செய்து, அந்த பாறைகளின் ரசாயன தன்மை உள்ளிட்டவற்றை ஆராயும் பணியை நேற்று துவங்கியது.
கியூரியாசிட்டியில் உள்ள, 10 உபகரணங்கள், பாறைகளின் ரசாயன தன்மை, மூலக்கூறுகளின் வடிவம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, படம் பிடித்து பூமிக்கு அனுப்ப உள்ளன.

0 கருத்துகள்: