தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.8.12

உலகின் வல்லமை வாய்ந்த அதி நவீன புகைப்பட கருவி : ஒரு செக்கனில் ட்ரில்லியன் ஃப்ரேம்கள்


உலகில் தற்போது பாவனையில் இருக்கும் FS700 மாடல் கமெரா ஒரு செக்கனுக்கு 240 முதல் 480 வரையான ஃப்ரேம்கள் படம் பிடிக்கக்கூடியது.ஆனா ல் MIT எனும் அமைப்பு ஒரு நவீன மிகவும் வினைத் திறன் மிக்க கமெரா ஒன்றைத் தயாரித்துள்ளது. சுமா ர் 500 சென்சார்கள் மூலம் ஆக்கப்பட்ட இக் கமெரா ஒரு செக்கனில் சுமார் ட்ரில்லியன் (1,000,000,000,000 ) ஃப்ரேம்கள் படம் பிடிக்கக் கூடியது.இதன் மூலம் போட்டோன்கள் எனப்படும் ஓளிக்கதிர்கள் பயணிப் பதைக் கூடத் துல்லியமாகப்
படம் பிடிக்க முடியும். மிகவும் வினைத்திறன் மிக் க இக்கமெரா மூலம் புகைப்படம் எடுக்கும் தொழிநுட்பம்  ஃபெம்டோ போட் டோகிராஃபி (Femto Photography) எனப்படுகின்றது. டைட்டேனியம் நீலரத்தின லேசர் கதிர்கள் மூலம் செயற்படும் இக்கமெரா 13 நனோ செக்கன்களுக்கு இடைப்பட்ட இடைவெளிகளில் படம் பிடிக்க வல்லது.

இக் கமெரா செயற்படும் தொழிநுட்பம் இன்றைய அறிவியல் உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது. அதாவது ஒளியலைகள் ஒரு பொருளைப் பாதிக்கும் விதத்தை அணுவணுவாகப் பார்ப்பது ஒரு புதிய அனுபவம் ஆகும். இதன் மூலம் ஒளிக்கதிர்கள் துணிக்கை அல்லது அலை இரண்டையும் சார்ந்தது என்பதும் நிரூபிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: