தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

6.7.12

ஹேக்கிங் மூலம் கருத்துக்கணிப்பு முடிவுகளை மாற்றுகிறது பிபிசி : குற்றம் சுமத்தும் ஈரான்


ஈரான் மீதான கருத்துகணிப்பு ஒன்றில் வாக்குகளி ன் எண்ணிக்கையை மாற்றுவதற்கான பிபிசி திரு ட்டுத்தனமாக ஹேக்கிங் செய்துள்ளது என ஈரானி ன் தேசிய தொலைக்காட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஈரானின் அணுவாயுத திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட கூடியதா, நிறுத்தப்பட வேண்டியதா என ஒரு வாக் கெடுப்பு நடந்தது. இதில் 63% வீதமானோர் உடனடி யாக இத்திட்டம் நிறுத்தப்பட வேண்டுமென வாக்க ளித்தனர். ஐரோப்பிய நாடு
கள் விதித்துள்ள பொருளாதார தடையை நீக்குவதற் கு இதுவொன்றே வழி என அவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர் என பிபிசியி ன் ஃபார்சி மொழியிலான சேவை தெரிவித்தது. 

எனினும் குறித்த ஈரானின் தேசிய தொலைக்காட்சி விடுத்துள்ள குற்றச்சாட்டில் உண்மையில் இப்புள்ளிவிபரத்தில் 24% வீதமானோரே இப்படி வாக்களித்திருந்தனர்.
ஏனையோர் அனைவரும் மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைக்கு பதிலடி வழங்க வேண்டும். கோல்ஃப் குடாவில் ஹோர்மூஸ் ஜலசந்தியை மூடுவதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யப்படுவதை தடுத்து நிறுத்த முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் இக்கருத்துக்கணிப்பு முடிவுகளை மாற்றி அமைப்பதற்காக பிபிசி ஹேக்கிங் செய்துள்ளது என தெரிவித்தது.

இந்நிலையில், இது தவறான குற்றச்சாட்டு, இதில் எந்த உண்மையும் இல்லை என பிபிசி பதில் அளித்துள்ளது. பிபிசியின் பெர்சியன் மொழி சேவையில் பயன்பெறும் ஈரானியர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எது உண்மை நிலை  என பிபிசி மேலும் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: