தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.6.12

சென்னை அண்ணா மேம்பாலத்தின் பஸ் விபத்து : நடந்தது என்ன?


இன்று முற்பகல் சென்னை அண்ணா மேம்பாலத்தி லிருந்து மாநகர பேருந்து கவிழ்ந்து வீழ்ந்தது தொடர் பில் பஸ் ஓட்டுனர் பிரசாத்தையும், நடத்துனர் ஹே மா குமாரையும் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஓட்டுனரின் இருக்கை சரியாக இல்லாததனால், இ ருக்கை நழுவி விழுந்து ஓட்டுனருக்கு கவனம் சித றியதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என்கிற கோணத்திலும், அல்லது ஓட்டுனர் கைபேசியில் பேசிக் கொண்டு கவனத்தைசிதறவிட்டு இந்த விபத்து நேர்ந்திருக்கலாம்  என் கிற கோணத்திலுமாக சென்னை பாண்டிபசார் போக்குவரத்து புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில்
பேருந்தில் பயணித்த ஒருவருக்கும் உயிர்சேதம் இல்லை என்றாலும், காயம், எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால், ராயப் பேட்டை அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை, அப்போலோ மருத்துவ மனை போன்ற மருத்துவ மனைகளில் அவசர சிகிச்சை அளிக்கப் பட்டது. ஒரு முதியவருக்கு மட்டும் பலத்த அடிபட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக சொல்லப் படுகிறது.
.
 
    
ஓட்டுனருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிகிறது. இந்நிலையில் சென்னை CITU தொழிற்சங்கம் தலைவர் பக்தவச்சலம் இந்த விபத்து தொடர்பாக பேசுகையில், "தொழில் நுட்பப் பணியாளர்கள் போதுமான அளவில் இல்லாததால், பேருந்துகள் சரியாகப் பராமரிக்கப் படுவதில்லை. தொழில் நுட்பப் பணியாளர்களின் காலியிடங்கள் நிரப்பப் படாமலே இருக்கிறது. பேருந்துகளுக்கு  வாங்கப்படும் உதிரிபாகங்கள் வாங்குவதே இல்லை. அப்படி வாங்கினாலும் அது தரமானதாக இல்லை. இப்படிப் பல கோளாறுகளை வைத்துக் கொண்டுதான் பேருந்தை இயக்க வேண்டியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

        விபத்துக்குள்ளான இந்த பேருந்தே, மாற்றுப் பேருந்தாக ஓட்டுனர் அனுமதி கேட்டு எடுத்துவந்த பேருந்துதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி மாற்றுப் பேருந்தை அவசர அவசரமாக எடுத்து வரும்போது, பேருந்து சரியாக உள்ளதா என்பதை முன்கூட்டியே கவனித்து வைக்கும் அளவிற்கு தொழில் நுட்பப் பணியாளர்கள் இல்லை என்பதே போக்குவரத்துக் கழகத்தின் பலதரப்புக் குரலாக உள்ளதாக கூறுகிறது மற்றுமொரு தகவல். 

0 கருத்துகள்: