ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுதாக்களை இன்று பிரணாப் முகர்ஜி செய்தார்.வரு கிற 19-ந்தேதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலுக் கான வேட்பு மனுதாக்கல் கடந்த 16-ந்தேதி தொடங்கி சனிக்கிழமையுடன் முடிவடைகிறது. இதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி . அவரை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மா போட்டியிடுகிறார்.இந்நிலையில் பிரணாப் முகர்ஜி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு க்களை தாக்கல் செய்தார்.
நான்கு வேட்பு மனுதாக்கள் பிரணாப் முகர்ஜிக்காக தயார் செய்யப்பட்டிருந்ததில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் அவரை வெளியில் இருந்து ஆதரிக்கும் கட்சிகளின் தலைவர்கள் வழி மொழிந்தும், முன்மொழிந்தும் கையெழுத்திட்டுள்ளனர். அந்த வகையில் பிரணாப் முகர்ஜியை வழிமொழிந்தும், முன்மொழிந்தும் 4 வேட்பு மனுக்களிலும் 480 எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். பாராளுமன்ற வளாகத்துக்குள் வந்த பிரணாப் முகர்ஜி பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், மற்றும் ஆதரவு தரும் தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் 4 வேட்பு மனுக்களையும் தாக்கல் செய்தார். அந்த மனுக்களை பாராளுமன்ற செயலாளர் வி.கே.அக்னி ஹோத்ரி பெற்றுக் கொண்டார்.
வருகிற 4ம் திகதி மாலை வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடப்படும். 19ம் திகதி காலையிருந்து ஓட்டுப்பதிவுகள் நடைபெற்று 22ம் திகதி ஓட்டுக்கள் எண்ணப்படும். பின் 24ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவரும் என தகவல்கள் தெரிவித்துள்ள
0 கருத்துகள்:
கருத்துரையிடுக