தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.12

பிரான்ஸ்: செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர் சர்கோசி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டார்


பிரான்சில் நிக்கோலஸ் சர்கோசியின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில், செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கை நிருபரான மரீனா துர்ச்சி(வயது 29) என்ற பெண் மீது கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இப்பெண்ணிடமிருந்து அவரது அடையாள அட்டையைப் பறித்துக் கொண்ட ஆதரவாளர் ஒருவர், இவர் இடதுசாரி நிருபர் என்று உரத்த குரலில் கூறினார்.

உடனே மற்றவர்களும் இந்தப் பெண்ணைத் தாக்கத் தொடங்கினர், யாரும் அவரை மீட்க வரவில்லை. இதுபோன்ற நிகழ்ச்சி நடப்பது இது முதல் முறையல்ல.
பல முறை UMP கட்சியைச் சேர்ந்த மூத்த தொண்டர்கள், இடதுசாரிச் சிந்தனையுடைய இந்த நிருபரைத் தாக்கியிருக்கின்றனர். தொடர்ந்து இவ்வாறு தாக்கப்படுவதால் தான் விரக்தி அடைந்திருப்பதாகவும் மரீனா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதத்திலிருந்து UMP கட்சியினர் பத்திரிகையாளர்களைத் தாக்கி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு அந்தக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும் என்று மரீனா கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2007ம் ஆண்டில் கடாஃபியிடம் 50 மில்லியன் யூரோ தேர்தல் நிதியாக சர்கோசி பெறுவதற்காகக் கையெழுத்தான ஒப்பந்தத்தை மீடியா பார்ட் கடந்த ஏப்ரல் மாதம் 29ம் திகதி அன்று வெளியிட்டது. அன்று முதல் UMP கட்சியினர் இந்த இணையத்தளப் பத்திரிகை நிறுவனத்தின் மீது கோபத்துடன் செயல்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: