தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

4.5.12

6 கோடி டாலர் செலவில் இலவச ஆன்லைன் பாடத்திட்டத்தை அளிக்கும் ஹார்வர்ட் பல்கலைக் கழகம்.


ஹார்வர்ட் பல்கலைக் கழகமும், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்ஐடி) இணைந்து மாணவர்களுக்கு பாடத்திட்டத்தை இலவசமாக ஆன்லைன் மூலம் அளிக்க உள்ளன.இதற்காக 6 கோடி டாலர் செலவில் இரு கல்வி நிறுவனங்களும் அமெரிக்க வாழ் இந்திய பேராசிரியர் ஆனந்த் அகர்வால் தலைமையில் ஆன்லைன் பாடத் திட்டங்கள் வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இடிஎக்ஸ் என்ற பெயரிலான இந்த கல்வித் திட்டம் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்தின்

படி லாப நோக்கம் இல்லாததாக இரு கல்விமையங்களால் நிர்வகிக்கக் கூடியதாக இருக்கும்.

இத்திட்டத்தைச் செயல்படுத்த ஹார்வர்ட் பல்கலை 3 கோடி டாலரும், எம்ஐடி 3 கோடி டாலரும் செலவிட முடிவு செய்துள்ளது.

சென்னை ஐஐடி மாணவரான அகர்வால், ஸ்டான்போர்ட் பல்கலையில் டாக்டர் பட்டம் பெற்றவர்.

இவர் இடிஎக்ஸ் பாடத் திட்டத்துக்கு தலைவராக இருப்பார். இப்போது எம்ஐடி-யில் கம்ப்யூட்ர் சயின்ஸ் மற்றும் செயற்கை அறிவூட்டல் ஆய்வகத்தின் இயக்குநராக

உள்ளார்.

இடிஎக்ஸ் பாடத் திட்டமானது ஆன்லைன் மூலம் மாணவர்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள உதவும் கல்வித் திட்டமாகும்.

இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் இந்தத் திட்டத்தை கற்க முடியும்.

ஆன்லைன் மூலமான வகுப்புகள் மற்றும் பாடத்திட்டம் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும்.

0 கருத்துகள்: