தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.12

முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்தவருக்கு ஏழு வருடங்கள் சிறை


அறியாத விடலைப்பருவமுடைய இரண்டு இளைஞர்கள் தமது பேஸ்புக்கில் முகமது நபி சித்திரத்தை பிரசுரித்த காரணத்தால் துனீசிய அரசு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. இத்தகைய செயல்கள் நாட்டின் பொது அமை திக்கு பங்கம் விளைவிக்கும் என்பதால் இந்த கடுமையான தண்டனை விதிக்கப் பட்டுள்ளது. டென்மார்க்கில் முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்து, அவருடை ய தலையில் ஒரு கிரனைட் இருப்பது போல வெளியான யூலன்ட் போஸ்டன் சித்திரங்களை வரைந்தவர்களை அரசு பாதுகாத்து வருகிறது. அதேவேளை பே ஸ்புக்கில் முகமது நபி கேலிச்சித்திரம் வரைந்தது போட்டவருக்கு சிறையில் போடுள்ளது ரூனீசியா. இப்படிப் போகிறது நாட்டுக்கு நாடு நடாத்தப்படும்
சட்டங்கள்
அதேவேளை தற்போது பஃகரின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டேனிஸ் மனித உரிமையாளர் அப்துல்காடி அல் கவாய்யா சிறையில் உண்ணாவிரதமிருந்து வருகிறார். டென்மார்க் குடியுரிமை பெற்ற பஃகரின் நாட்டில் பிறந்தவரான மனித உரிமையாளரான அல் கவாய்யா பஃகரின் நாட்டில் உள்ள சன்னி முஸ்லீம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்தாக குற்றம் சுமத்தப்பட்டு, ஆயுட்கால சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். இவர் சிறையில் நீர் மட்டும் அருந்தி 57 நாட்களாக உயிருக்கு போரடி வருகிறார். மேலும் ஒரு வாரம் கழிந்தால் இவர் மரணித்துவிடுவார் என்று அவருடைய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இது இவ்விதமிருக்க நேற்று அவருடைய மகள் ஸினப் அல் கவாயா கைதானார். இவர் தந்தைக்காக தானும் உண்ணாவிரதமிருக்கப் போவதாக அறிவித்துள்ளார். பஃகரினில் உள்ள சன்னி முஸ்லீம் மன்னர் ஒரே குடும்ப அங்கத்தவரை 70 வீதம் உயர் நிர்வாகத்தில் நியமித்து சர்வாதிகார ஆட்சி நடாத்தி வருகிறார். டேனிஸ் குடியுரிமை பெற்ற அல் கவாய்யா சியா முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர் என்பதால் சிக்கல் தீர வாய்ப்புக்கள் குறைவு. இவருடைய விவகாரத்தில் டேனிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லி சுவிண்டேல் தலையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்: