தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

9.4.12

இங்கிலாந்தில் கடைகளில் சிகரெட் பாக்கெட்டுக்களை அடுக்கிவைத்து விளம்பரப்படுத்த தடை.


இங்கிலாந்து கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனை செய்ய அதன் பாக்கெட்டுகளை கடைகளில் வரிசையாக அடுக்கி வைத்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.ஆனால் இங்கிலாந்து நாட்டில் கடைகளில் சிகரெட் பாக்கெட்களை அவ்வாறு விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சிகரெட் பாக்கெட்டுக்களை புது விதத்தில் கவர்ச்சிகரமாக அடுக்கி விளம்பரப்படுத்துவதன் மூலம் அவை இளைஞர்களை சுண்டி இழுத்து புகைக்கும் ஆவலை தூண்டுகிறது.
 
எனவே, அவர்கள் அவற்றை வாங்கி புகைக்கின்றனர். இதன் மூலம் புற்றுநோய், காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். இதை தடுக்கவே, கடைகளில் சிகரெட் பாக்கெட்டுகளை அடுக்கி வைத்து விளம்பரப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை அங்குள்ள அலமாரிகளில் கவர்ச்சிகரமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சிகரெட் பாக்கெட்டுக்கள் திடீரென மாயமாகிவிட்டன.
 
அரசின் இந்த நடவடிக்கையை பலர் வரவேற்றுள்ளனர். அதே நேரத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். இது தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது என்று கூறியுள்ளனர்.

0 கருத்துகள்: