தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.12

ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிடுவது யார்.. தொடர் குழப்பம்.


வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிப ர் தேர்தலில் தற்போதய அதிபர் பராக் ஒபாமாவை யார் எதிர்த்துப் போட்டியிடப் போகிறார்கள் என்பதை நேற்ற ய சூப்ப செவ்வாய் வாக்களிப்புக்கள் தீர்மானம் செய்யு மென ஊடகங்கள் ஓங்கி ஒலித்து வந்தன. மொத்தம் பத் து மாநிலங்களில் வாக்களிப்புக்கள் நடைபெற்றன. இது வரை முற்றாக வாக்குகள் எண்ணப்படாத போதிலும், யார் சரியான வேட்பாளர் என்பதை சூப்ப ரியூஸ்டே தெ ரிவு செய்யாமல் போய்விட்டதாக
தெரிவிக்கப்படுகிறது. தற்போது ஆடு களத்தில் நான்கு வேட்பாளர்கள் நிற்கிறார்கள். றொம்னி, றக் சான்ரோம், நிவ்ற் கிங்கிறிஜ், றொன் போவுல் ஆகிய நால்வரும் ஒருவரை மற்றைவர் வெல்ல விடாது இழுத்து வருகிறார்கள். இதுவரை நடந்த தேர்தல்களில் றொம்னிக்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் சற்று முன்னர் வெளியான ஜோர்ஜியா முடிவுகளில் நிவ்ற் கிங்கிறிஜ் 76 வீதமான வாக்குகளையும், றொம்னி 26 வீத வாக்குகளையும், றிக் சான்ரோம் 20 வீத வாக்குகளையும், றொன் போவுல் 9 வீத வாக்குகளையும் பெற்றுள்ளனர். ரென்னஸ்சீயில் வெளியான முடிவுகளில் றிக் சான்ரோம் 37 வீதமும், றொம்னி 28 வீதமும், கிங்கிறிஜ் 24 வீதமும், றொன் போவுல் 9 வீதமும் பெற்றுள்ளார்கள். ஒகியோவில் றொம்னி வென்றுள்ளார். ஆனால் தேர்தல் தொடர்ந்து நடைபெற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. வெற்றியாளரை முடிவு செய்ய சூப்ப ரியூஸ்டே தவறிவிட்டது.
மேலும் கடும் போட்டி நிலவும் காரணத்தால் நான்கு வேட்பாளர்களும் மடைத்தனமான கருத்துக்களை முன் வைத்து மக்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்கள். ஈரான் மீது தாக்குதலை நடாத்த தயார் என்று ஒரு வேட்பாளர் கூறியுள்ளார். இந்த வேட்பாளர்கள் குறித்து வோஷிங்டன் போஸ்ற் நடாத்திய கருத்துக் கணிப்பு இன்று வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக அதிகமான மக்கள் இந்த வேட்பாளர் நால்வரையும் வெறுக்கிறார்கள் என்று அந்தக் கணிப்பு கூறுகிறது. அதேவேளை றிப்பப்ளிக்கன் கட்சியில் 10 : 6 பேர் றொம்னியையே விரும்புவதாகவும் தெரிவிக்கிறது. இவ்வளவு சிக்கல்களை சந்தித்து அதிபர் மோதலுக்கு வந்தாலும் ஒபாமாவை விழுத்தக்கூடிய நிலை வெற்றியாளருக்கு இருக்கும் என்று கூற முடியாது. ஒபாமா கருத்துக் கணிப்பில் தொடர்ந்து வெல்ல ஆளில்லாதவாறு முன்னணி வகிக்கிறார்.
அதேவேளை அரசியலில் சிறிய பாம்பானாலும் அதைப் பெரிய தடியால் அடி என்று கூறுவார்கள். அதற்கு அமைவாக நேற்று பத்திரிகையாளரிடம் கருத்துரைத்த அமெரிக்க அதிபர் ஈரான் மீது தாக்குதல் நடாத்துவதற்கு அமைவாக அங்கு ஓர் அணுகுண்டை தான் காணவில்லை என்று தெரிவித்துள்ளார். ஈராக்கிற்குள் நுழைந்த பின்னர் அணு குண்டு அங்கு இல்லை என்பதை அறிந்த முன்னாள் அமெரிக்க அதிபரின் மடைத்தனத்தை தான் செய்யப் போவதில்லை என்பதை அவர் மறைமுகமாக கோடி காட்டியுள்ளார். இது றிப்பப்ளிக்கன் கட்சிக்கு பலத்த அடியாக இறங்கியுள்ளது. இதனால் வீறு கொண்ட முன்னாள் றிப்பப்ளிக்கன் வேட்பாளர் மக்கெயின் சிரியா மீது விமானத் தாக்குதலை நடாத்த வேண்டுமென முழங்கியிருந்தார். ஆனால் சிரியா மீதும் இராணுவத் தாக்குதல் கிடையாது, இராஜதந்திர நடவடிக்கைகளே முன்னெடுக்கப்படும் என்கிறார் ஒபாமா. நேற்று முன்தினம் தன்னை சந்தித்த இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெட்டன் யாகுவிடமும் அவர் இதையே தெரிவித்து அனுப்பியுள்ளார். ஆனால் உள்ளுரில் வரும் எதிர்ப்பிற்கு பயந்த நெட்டன் யாகு இஸ்ரேல் தன்னைப் பாதுகாக்க வேண்டிய அனைத்தையும் செய்யுமென போலியான வீறாப்பு காட்டி மறைந்தது தெரிந்ததே.
அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளுர் பிரச்சனைகளை தீர்த்து, அமெரிக்க வாக்காளரின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதே சரியான தேர்தல் அணுகுமுறையாகும். அதைவிடுத்து அயல் நாடொன்றுடன் போர் தொடுத்து, மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெறுவது தமது கொள்கை அல்ல என்று தேர்தல் வியூகம் வகுத்துள்ளார் பராக் ஒபாமா. அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது சரியான பாதையில் திரும்பியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் குறைந்துள்ளது. பின்லேடன் உட்பட முக்கிய பயங்கரவாத இலக்குகள் தகர்க்கப்பட்டுவிட்டன. இன்னமும் முக்கிய பிரச்சனையாக இருப்பது கியூபாவில் உள்ள அமெரிக்காவின் சித்திரவதை முகாம் குவாண்டநோமா மட்டுமே. தேர்தல் நெருங்க அதற்கும் மூடுவிழா நடாத்த ஒபாமா முயலலாம். அவருடைய கடைசி தேர்தல் துருப்புச் சீட்டாக அதுவே இருக்க வாய்ப்புள்ளது.
மறுபுறம் ஈரான், சிரியா இரண்டும் இப்போது சிறிய ஆறுதலடைந்துள்ளன. வரும் நவம்பர் 8ம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடியும்வரை தமது நாடு அமெரிக்கக் குண்டுகளை ஏந்த வேண்டிய அவசியம் இல்லை என்ற இடத்திற்கு அவை நகர வழிபிறந்துள்ளது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு கொடுக்கும் அழுத்தம் போல சிரியா, ஈரான் போன்ற நாடுகளை போரின்றி தடைகள் மூலம் விஷம் தணிக்க முடியுமா என்று அமெரிக்கா யோசிக்கிறது. இந்தியாவில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களில் நேற்று ஆளும் காங்கிரஸ் மண் கவ்வியுள்ளது. லிபியா, சிரியா, சிறீலங்கா, பர்மா போன்ற போர்க்குற்ற நாடுகளின் பக்கம் நிற்கும் காங்கிரஸ் ஆட்சியை மக்கள் படிப்படியாக தூக்கி வீசிவருகிறார்கள். இது ஐ.நாவுக்கு நம்பிக்கை தரும் மாற்றமாக இருக்கிறது. இதுபோன்ற தாக்கங்கள் போரைவிட இலாபகரமானது என்ற ஒபாமாவின் வியூகம் அமெரிக்க மக்களுக்கு திருப்தி தருகிறது. இதையே வோஷிங்டன் போஸ்ற்றின் இன்றைய கருத்துக் கணிப்பு தெளிவாகக் காட்டுகிறது. ஜெனீவாவில் சிறீலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சிறீலங்காவில் மகிந்த ஆட்சியும், இந்தியாவில் சோனியா ஆட்சியும் தேர்தலில் தூக்கி வீசப்படும் அபாயம் உள்ளது. அவர்கள் இருவரும் ஆடும் கூத்துக்கு அடிப்படைக் காரணம் அவர்களுடைய பதவி நாற்காலி மட்டுமே என்பதுதான் நிஜம். மற்றப்படி போர் – குற்றம் – காடு – மலை – கோபாலசாமி – சம்மந்தர் என்பதெல்லாம் அவர்களுக்கு சம்மந்தா சம்மந்தமில்லாத விடயங்களே.

0 கருத்துகள்: