நியூயார்க்:கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்கா தாங்கள் பின் லேடனை பாகிஸ்தானில் வைத்துக் கொன்றுவிட்டதாகவும் அவரின் உடலை ஒரு பையினுள் வைத்து கடலில் போட்டு விட்டதாக அறிவித்திருந்ததை அடுத்து பெரிய சர்ச்சை வெடித்தது. மேலும் தாங்கள் இஸ்லாமிய முறைப்படிதான் அடக்கம் செய்ததாகவும் கூறியது ஆனால் தற்போது பின்
லேடனின் உடல் அமெரிக்காவின் வசம் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.ஸ்ட்ராத்ஃபோர் என்னும் தனியார் உளவு நிறுவனத்தின் மெயில்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டு வருகிறது. அதில் ஸ்ட்ராத்ஃபோர் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரெட் பர்டன் தனது நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் பின் லேடனின் உடல் வெளிநாடுகளில் கொல்லப்படும் அமெரிக்க ராணுவ வீரர்களை வைத்திருக்கும் டோவர் விமானத் தளத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் பர்டன் இன்னொரு மெயிலில் லேடனின் உடல் டோவர் விமானத் தளத்திலிருந்து சி.ஐ.ஏ வின் விமானம் மூலம் பெதேச்டாவில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ கூடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
விக்கிலீக்சில் வெளியாக்கியுள்ள இந்த செய்தி உண்மையாயிருப்பின் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த செய்தியாகும். மேலும் பின் லேடனின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்க மக்களை ஏமாற்றிவரும் ஒபாமா அரசின் முகத்திரை கிழியும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
News@thoothu
0 கருத்துகள்:
கருத்துரையிடுக