தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

8.3.12

சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீடு தவறான யோசனை : ஒபாமா


சிரியாவில் அமெரிக்க இராணுவ தலையீட்டினை நேரடி யாக மேற்கொள்வது, தவறானது என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.சிரியாவின் தற்போதை ய நிலைமை அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. எனினும் லிபியாவை போன்று அமெரிக்காவின் நேரடி இராணுவ தலையீடு, தவறானதாக இருக்கும். சிரியாவை அனைத் து விதத்திலும் தனிமைப்படுத்துவதன் மூலமே அந்நாட் டின் அதிபர் பஷார் அல்
அசாத்தை பதவியிலிருந்து விலக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
2012ம் வருடத்தின் முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட ஒபாமா இக்கருத்துக்களை கூறியிருந்தார். சிரியாவை போன்று அமெரிக்க இராணுவம் நேரடியாக களமிறங்கி சிரிய இராணுவத்தின் அராஜக நடவடிக் கைகளை தடுக்க வேண்டும் என அமெரிக்க செனட்டரும், 2008ம் ஆண்டு, பாரக் ஒபாமாவின் எதிர்ப்பாளருமான ஜோன் மெக்கெய்ன் கோரியிருந்தார்.
இந்நிலையிலேயே லிபியாவை சிரியாவுடன் ஒப்பிடக்கூடாது. சிரியாவின் நிலைமைகள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதாக ஒபாமா கூறியுள்ளார்.

0 கருத்துகள்: