தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.12

முஸ்லிம் பிரதிநிதித்துவம்: மாநிலங்களவையில் பா.ஜ.க-பஸ்வான் வாக்குவாதம்!


புதுடெல்லி:டெல்லியில் தனியார் பள்ளிக்கூடங்களில் முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை குறைவு தொடர்பாக மாநிலங்களவையில் பா.ஜ.க-பஸ்வான் கட்சி(எல்.ஜே.பி)-என்.சி.பி உறுப்பினர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.கேள்வி நேரத்தில் லோக் ஜனசக்தி பார்டி(எல்.ஜே.பி) தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் இப்பிரச்சனையை எழுப்பினார். அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட பஸ்வானுக்கு உரை நிகழ்த்த அனுமதி மறுத்த அவைக்கு தலைமை வகித்த பி.ஜே.குரியனை ’காங்கிரஸ் காரர்’ என்று பஸ்வான் அழைத்தது அமளிக்கு காரணமானது. இதனைத் தொடர்ந்து பஸ்வான் தனது வார்த்தையை வாபஸ் பெறக்கோரி பா.ஜ.க உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். தான் மோசமான வார்த்தையை பிரயோகிக்கவில்லை என்று பஸ்வான் கூறினார்.
டெல்லி பள்ளிக்கூடங்களில் நர்சரி அட்மிஷனில் முஸ்லிம் சமுதாயத்தைச் சார்ந்த மாணவர்களின் எண்ணிக்கையில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பத்திரிகையைச் செய்தியை எடுத்துக்காட்டி பஸ்வான் உரை நிகழ்த்த எழுந்தார். ஆனால், பள்ளிக்கூட அட்மிஷனுக்கு மதச்சாயம் பூசக்கூடாது என்று பா.ஜ.கவின் பல்பீர் பூஞ்ச் பஸ்வானுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்பொழுது தேசியவாத காங்கிரஸ்(என்.சி.பி) உறுப்பினர் தாரிக் அன்வர் பஸ்வானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதன் மூலம் வாக்குவாதம் சூடுபிடித்தது. பல்பீர் பூஞ்ச் ஒருதலைபட்சமாக பேசுவதாக குற்றம் சாட்டிய தாரிக் அன்வர், கட்சியின் செய்தி தொடர்பாளராக முஸ்லிம் பெயர் தாங்கியவரை பா.ஜ.க நியமித்து இருந்தாலும் முஸ்லிம் என்ற பெயரை கேட்டாலே அவர்கள் எதிர்க்க கிளம்புகின்றனர். முஸ்லிம்கள் இந்நாட்டின் குடிமக்கள் இல்லையா? என தாரிக் அன்வர் கேள்வி எழுப்பினார்.

0 கருத்துகள்: