தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.12

வடகொரியாவின் உளவு ராக்கெட்டை சுட்டு வீழ்த்துவோம்: ஜப்பான் மந்திரி ஆவேசம்


வடகொரியா மறைந்த தலைவர் கிம் யங்-சங் 100-வது ஆண்டு பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் (ஏப்ரல்) ராக்கெட்டுடன் கூடிய அதிநவீன உளவு செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ளது.இதற்கு அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்தகூடாது என வலியுறுத்தி வருகின்றன.  இந்த நிலையில், ஜப்பான், ராணுவ மந்திரி நயோகி தனாகி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அடுத்த மாதம் உளவு ராக்கெட்டை விண்ணில் செலுத்த வடகொரியா தயாராகி வருகிறது. அந்த ராக்கெட் ஜப்பான் மீது பறக்கும் போது தற்காப்புக்காக அதை சுட்டு வீழ்த்த உத்தரவிடலாமா என ஆலோசித்து வருகிறேன். அதுதவிர வேறு நடவடிக்கை மேற்கொள்வது எப்படி என்பது குறித்தும் ஆராய்ந்து வருகிறோம் என தெரிவித்தார்.

0 கருத்துகள்: