ஈரான் மீது போர் எப்போது..? இதுதான் ஐரோப்பாவில் இப்போது கொதிநிலை விவகாரமாக உள்ளது. நேற் றைய செய்திகள் இஸ்ரேலை சிறிது பொறுமை காக்கு ம்படி அமெரிக்க அதிபர் கூறியுள்ளதாக தெரிவித்திருந் தன. இன்றைய இஸ்ரேலிய காலைத் தினசரிகளில் இ து குறித்த மேலதிக செய்திகள் வெளியாகியுள்ளன.வ ரும் நவம்பர் 8 அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவதற்கு முன் ஈரானுடனான போரை நடாத்திவிட முடியாது. ஈ ரானின் அணு குண்டு உருவாக்கத்தை போர்
தவிர்ந்த ம ற்றைய வழிகளில் முடிவுக்குக் கொண்டு வர முயல வேண்டும், தவறினால் மட்டுமே போரினால் அதை முடிவுக்குக் கொண்டு வரலாம், அதற்கும் வரும் 2013 வரை காத்திருக்க வேண்டும்.
தவிர்ந்த ம ற்றைய வழிகளில் முடிவுக்குக் கொண்டு வர முயல வேண்டும், தவறினால் மட்டுமே போரினால் அதை முடிவுக்குக் கொண்டு வரலாம், அதற்கும் வரும் 2013 வரை காத்திருக்க வேண்டும்.
அதற்குள் ஈரான் தாக்குதல் நடாத்தினால் இஸ்ரேல் என்ன செய்வது.. பயப்பட வேண்டியதில்லை. இஸ்ரேலிடம் இப்போதிருக்கும் ஆயுத வளங்கள் ஈரானை எதிர் கொள்ள போதுமானவையே. இருப்பினும் இஸ்ரேலின் கவலையைப் போக்க மேலும் புதிய ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு வழங்கப்படும். முதலாவது ஈரான் தனது அணு குண்டுகளை நிலத்தடியில் பதுக்கி வைத்திருந்தால் அதை தேடிச் சென்று அழிக்கவல்ல நிலத்தைத் துளைக்கும் விசேட குண்டுகளும், அதற்கான அதி நவீன விமானங்களும் இஸ்ரேலுக்கு வழங்கப்படும். அதை நீண்ட காலம் இஸ்ரேல் வைத்திருக்க முடியும். அவை இருக்கும்வரை ஈரான் குறித்த அச்சம் இஸ்ரேலுக்கு வேண்டியதில்லை என்றும் அமெரிக்கா அறிவுறுத்தி, பெஞ்சமின் நெட்டன் யாகுவை திருப்தி அனுப்பியுள்ளதாகவும் அப்பத்திரிகை எழுதியுள்ளது. மேலும் நெட்டன் யாகு சொன்னது போல இஸ்ரேல் தன்னைத் தானே பாதுகாக்கும் என்ற கருத்தை இஸ்ரேலியர் வரவேற்கவில்லை. மொத்தம் 58 வீதமான இஸ்ரேலியர் அமெரிக்காவை விட்டு இஸ்ரேல் மட்டும் தனித்து போருக்கு போவதை விரும்பவில்லை என்றும் அது கூறியுள்ளது. இதை நன்கு உணர்ந்த ஈரானிய அதிபர் இஸ்ரேலை உலகப் படத்தில் இருந்தே தூக்கி வீசுவேன் என்று தொடர்ந்து வீர வசனம் பேசி வருகிறார். இதனால் இஸ்ரேல் அரசு பல உள்நாட்டு சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ள வாக்குறுதி பிரான்சை சற்று விழிப்படைய வைத்திருக்கிறது. பிரான்ஸ் மறுபடியும் ஈரானிய விவகாரத்தை மேசையில் போட்டு தூசு தட்ட ஆரம்பித்துள்ளது. இந்த விவகாரத்தை உலக வல்லரசுகளுடன் மறுபடியும் பேசப்போவதாக அறிவுறுத்தியுள்ளது. பிரான்சிய வெளிநாட்டு அமைச்சர் அலன் யூப்ப நேற்று ஊடகங்களுக்கு வழங்கிய செய்தியில் ஈரான் குறித்து தமக்கு மீண்டும் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஈரான் உள்நாட்டு மக்களுக்கு ஒரு முகமும், வெளிநாடுகளில் இன்னொரு முகமுமாக இரட்டை வேடம் போட்டு வருவதாகக் கூறினார். அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டீனா அஸ்ற்கொன் சீனா, ரஸ்யா, அமெரிக்கா, பிரிட்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் இது குறித்த பேச்சுக்களை நடாத்தி வருகிறார். பிரான்சும் இந்த விவகாரத்தை இனி இறுக்கமாக பேசப்போவதாகக் கூறியுள்ளது.
இது ஒருபுறமிருக்க இன்று சீன இராஜதந்திரிகள் குழு சிரியா சென்றுள்ளது. சிரிய அதிபர் ஆஸாட்டுடன் பேச்சுக்களை முன்னெடுத்துள்ளனர். சிரியப்படைகள் நடாத்தும் பொது மக்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்தும்படி அவர்கள் கேட்டுள்ளனர். சிரிய அதிபர் எதிரணியுடன் உடனடியாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும், அத்தோடு அரபுலீக்குடனும் நட்பை வளர்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுவரை 7500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்குப் பிறகும் சீனாவும், ரஸ்யாவும் சிரிய அதிபருக்கு துணையாக இருப்பதை உலக சமுதாயம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இந்த இக்கட்டான நிலையில் சீனா ஆதரவை தொடர்ந்து நீடிப்பதில் சிரமம் இருப்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். எதிரணியினர் ஆஸாட்டின் குடும்ப ஆட்சி விலத்தப்பட வேண்டும், புதிய ஜனநாயக சீர்திருத்தங்கள் மலர வேண்டுமென வாதாடி வருகிறார்கள்.
சீனாவின் குழு சிரியாவில் நிற்க, மறுபுறம் சிரிய அதிபர் ஆஸாட்டின் மந்திரிசபையில் அதி முக்கிய பாத்திரம் வகித்த எரிபொருள் அமைச்சர் அப்டோ குசாமுடீன் ஆஸாட் றெஜீமில் இருந்து பாய்ந்து எதிரணிக்கு போயுள்ளார். அவர் ரமி போராளிகள் குழுவிற்கு ஆதரவாக மாறியுள்ளார். இவருடைய மாற்றம் சிரிய அரசியலில் பலத்த உள்ளக சூறாவளி வீசத்தொடங்கிவிட்டதையே காட்டுகிறது. இவருடைய அணி தாவல் வீடியோ யூ ரூப் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
ஆனால் இன்று வெளியான மேலை நாட்டு நிபுணர்களின் சிரிய போர் மதிப்பீட்டு அறிக்கை சிரியாவில் போராடும் ஆயுதம் தரித்த போராளிகளின் தாக்குதல் ஆஸாட்டின் படைகளுக்கு ஒரு நுளம்புக்கடி போலவே இருப்பதாக கூறியுள்ளது. போராளிகளுக்கும், சிரியப்படைக்கும் உள்ள வலுவை ஒப்பிட்டால் ஆஸாட்டுக்கு போராளிகள் தூசுக்கு சமமானவர்கள் என்றும் கூறியுள்ளார்கள். ஆஸாட்டின் படைகள் இராணுவ வலையாக்கத்தை பலத்துடன் வைத்துள்ளன. சகல நகரங்களின் மத்திய பகுதிகளையும் கைப்பற்றி போராளிகளை புறந்தள்ளியுள்ளனர். அவர்களுடைய இராணுவ ஆளுமையை போராளிகளின் இன்றைய பலத்தால் வெற்றி கொள்வது கடினம் என்று மத்திய கிழக்கு இராணுவ விவகாரப்பிவைச் சேர்ந்த டேனிஸ் ஆய்வாளர் ரொபி டொட்ஜ் தெரிவித்தார். ஆக, சிரிய பிரச்சனை ஏதோ ஒரு வடிவத்தில் பேசப்பட்டு, ஏமன் போல ஆஸாட் றெஜீம் பதவி மாறப்போவது தெரிகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக