இந்தோனேசிய நாடாளுமன்ற சபாநாயகர் மர்சுகி ஏலி நேற்று கூறுகையில், ‘‘சமீப காலமாக பெண்கள் மீதான பலாத்காரம் மற்றும் ஒழுக்கமற்ற செயல்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பெண்கள் சரியானவகையில் டிரஸ் அணியாததே காரணம்.பெண்கள் அணியும் டிரஸ் ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது. இதை தடுக்க வேண்டும். பெண் எம்பிக்கள் மினி ஸ்கர்ட்
போன்ற டிரஸ் அணிய தடைவிதிக்கும் வகையில் விதிமுறைகள் கொண்டு வரப்படும்’’ என்றார். இதற்கு அந்நாட்டு பெண்கள் அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.‘பெண்களை வன்முறையில் இருந்து காப்பதை விட்டுவிட்டு, டிரஸ்சை குறை சொல்லக் கூடாது’ என்று அவர்கள் கூறினர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஜகார்த்தா கவர்னர் பாஜி போவோ, பஸ், ரயில் போன்றவற்றில் செல்லும்போது பெண்கள் மினி ஸ்கர்ட் அணிவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். அப்போது அவருக்கு எதிராக பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக