கடந்த மாதம் 13-ந்தேதி கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 2 தமிழக மீனவர்களை இத் தாலி கப்பலில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள் துப் பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனர். இந்திய கட லோர காவல் படையும், கேரள போலீசாரும் இத்தா லி கப்பலை கண்டுபிடித்து
கொச்சி துறைமுகத்துக் கு கொண்டு வந்தனர். 2 பாதுகாப்பு அதிகாரிகள் போலீசில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இது தொடர்பான வழக்கில் இத்தாலி கப்பல் உரிமையாளர்கள் ரூ. 3 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதில் கோர்ட்டுக்கு வெளியே சமரச முயற்சி நடக்கிறது. இதற்கிடையே இந்த வழக்கில் முக்கிய ஆதாரம் கப்பலின் கறுப்பு பெட்டி ஆகும். கப்பல் கேப்டன் பேச்சுக்கள், அவர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு என்ன உத்தரவிட்டார்.

கப்பல் அந்த சமயத்தில் எந்த கடல் பகுதியில் இருந்தது என்ற விவரங்கள் அதில் அடங்கி இருக்கும். விமானத்தில் இருப்பது போன்று இந்த கறுப்பு பெட்டியும் கப்பலில் இருக்கும். கொச்சி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இத்தாலி கப்பலில் இருந்து கறுப்பு பெட்டியை எடுக்க போலீசாரும் அதிகாரிகளும் சென்றனர். ஆனால் கப்பலில் கறுப்பு பெட்டி இல்லை. அது மயமாகிவிட்டது தெரிய வந்தது.
விசாரணையின் முக்கிய அங்கமாக உள்ள கறுப்பு பெட்டி மாயமானது அறிந்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தடயங்களை அழிக்க முயற்சி நடந்துள்ளதா? என்று விசாரணை நடக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக