இஸ்ரேலின் பிரதமரான பெஞ்சமீன் நெதான்யாகு(Benjamin Netanyahu) பன்னாட்டு தலைவர்களுடன் கலந்து விவாதித்து ஈரான் பிரச்னைக்கு ஒரு தீா்வை தேடிக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்து விவாதிப்பதற்காக கனடா சென்ற இஸ்ரேல் பிரதமா், கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒட்டாவாவில் கனடா பிரதமா் ஸ்டீபன் ஹார்ப்பெரைச்(Stephen Harper) சந்தித்துப் பேசினார்.பின்பு நடந்த பத்திரிக்கையாளர்
சந்திப்பின்போது, இஸ்ரேல் நடத்துவது இலட்சியப் போராட்டம் என்றும் ஈரானின் தந்திரமான பேச்சுவலையில் உலகநாடுகள் சிக்கிச்கொள்ளக்கூடாது என்றும் நெதான்யாகு எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் இது குறித்து இஸ்ரேலின் இடைக்காலத் தலைவரான பாப் ரே(Bob Rae) கூறுகையில், ஈரான் விடயத்தில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டு அமைதியை நிலைநாட்ட கனடாவின் அறிவுரையும், அனுபவமும் தேவைப்படுவதாக் கூறினார்.
இதையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க செல்லும் நெதான்யாகி அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுடன்(Barack Obama) இணைந்து இரு நாட்டு பொது நடவடிக்கைகள் குழுவின் கொள்கைகளை விளக்கக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். அங்கும் ஈரான் பிரச்னை குறித்தும் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் ஈரான் மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதை ஒபாமா ஆதரிக்கவில்லை இதற்குக்காரணம் ஈரான் மீது சர்வதேசக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதால் இராணுவத் தாக்குதலுக்கும் ஆதரவளிக்கத் தயங்குவதாக தெரிகின்றது.
மேலும் இஸ்ரேலின் தீவிர ஆதரவாளராகத் திகழும் கனடாவின் பிரதமா் ஹார்ப்பெர் கூறுகையில், ஈரான் தனது அணு சக்தி நிலையங்கள் அமைதி நோக்குடையன என்று தெரிவிப்பது பொய் என்றும் அங்கு மதவெறி அதிகமாக இருப்பதால் அது ஒரு ஆபத்தான நாடு என்று கூறி யூதபயங்கரவாதிகளுக்கு துணைபோய் கனடாநாட்டு பிரதமர் தானும் பயங்கரவாதிதான் என்று நிரூபித்து வருகிறார். என்று மாறுவார்களோ இந்த போலி மதச்சார்பின்மைவாதிகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக