சுவைக் : இன்று குவைத்தில் சுவைக் பகுதியில் வீசிய கடும் புழுதி காற்றால் சுவைக் துறைமுகத்தில் எப்பணியும் மேற்கொள்ள முடியாமல் துறைமுகம் இழுத்து மூடப்பட்டதாக குவைத் துறைமுக அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் அவ்வறிக்கையில் கடுமையான மண் புழுதியால் ஒரு மைல் தூரத்திற்குள்ளேயே பார்க்கும் அளவு வானிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துறைமுகத்தில் கப்பல்கள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே துறைமுகத்தின்
பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சுவைக் துறைமுகத்தின் மேலாண் இயக்குநர் சுலைமான் அல் யஹ்யா தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக