தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

3.3.12

கொலைக்களம் பாகம் 02 ஆவணப்படம் மார்ச் 14ல் வெளியீடு சேனல் 4 அறிவிப்பு


இலங்கையின் கொலைக்களம் பகுதி 02′ எனும் ஆவ ணப்படத்தை எதிர்வரும் 14ம் திகதி இரவு 10.55 மணி க்கு வெளியிடவுள்ளதாக பிரிட்டனின் சனல் 4 தொ லைக்காட்சி அறிவித்துள்ளது.ஜெனிவாவில் இடம் பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரி மைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இலங் கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ள நிலையில், இலங்கையின் கொலைக்களம் தண்ட னைக்கு உட்படுத்தப்படாத
போர்க்குற்றங்கள்’ எனும் தலைப்பில் இப்புதிய ஆவ ணப்படம் வெளிவரவுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நான்கு குற்றங்கள் தொடர்பாக இப்புதிய ஆவணப்படத்தில் விசேடமாக ஆராயப்பட்டுள்ளதுடன், இக்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்கள் யார்? என்றும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது யுத்த சூனிய பிரதேசத்தில் பொதுமக்கள் மீதும், வைத்தியசாலைகள் மீதும் நடத்தப்பட்ட பயங்கரமான எறிகணைத் தாக்குதல்கள், இப்போரின் போது இடம்பெயர்ந்த இலட்சக்கணக்கான பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துவ வசதிகள் மறுக்கப்பட்டதுடன், யுத்த வலயத்துக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவிடாமல் தடுக்கப்பட்ட சம்பவங்கள், மீட்பு நடவடிக்கையின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டமையுடன், புலிப் போராளிகள் நிர்வாணப்படுத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள், 12 வயதுச் சிறுவன் ஒருவன் மிக கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகிய போர்க்குற்றங்கள் தொடர்பில் இந்தப் புதிய ஆவணப்படத்தில் ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வாக்குமூலங்களும், ஆதாராங்களும் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் இழப்புகளைத் தடுப்பதற்கும், அவ்விவகாரத்தில் தலையீடு செய்வதற்கும் சர்வதேச சமூகம் தவறியமை தொடர்பான தீவிரமான கேள்விகளை எழுப்பும் என நம்பப்படுகின்றது. அத்துடன், போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழுவின் அழைப்பை இப்புதிய ஆவணப்படம் மீண்டும் வலுப்படுத்தும் எனவும் நம்பப்படுகின்றது.

0 கருத்துகள்: