அஹ்மதாபாத்: குஜராத் மாநிலத்திலிருந்து வெளிவரும் மாத இதழ் ஒன்றில் கிறித்தவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து ஒரு கையில் மது கோப்பையையும் மறுகையில் புகையும் சிகரெட்டையும் வைத்திருப்பதைப் போன்ற புகைப்படம் வெளியான சம்பவம் அங்குள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.குஜராத்தின் ஆனந்த் நகரில் உள்ள குஜராத் சாகித்ய பிரகாஷ் சொசைட்டியில் பவன் ஹூருடே தூத் என்ற வார இதழ் அச்சிடப்படுகிறது. மேலும் இந்த மாத இதழ் குஜராத்தில் உள்ள
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் அதிகாரப்பூர்வ இதழாகும்.இந்நிலையில் அம்மாத இதழின் முப்பதாவது பக்கத்தில் இயேசு பீர் கோப்பையை வைத்திருக்கும் படம் வெளியானது இதனால் அம்மாத இதழை படித்த கிறிஸ்துவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆனந்த நகர் காவல்துறையில் அம்மாத இதழின் வாசகரான மனோஜ் மக்வான் என்பவர் புகார் அளித்துள்ளார் ஆனந்த் நகர் காவல் ஆய்வாளர் தியோரா இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.
இதுபற்றி அவர் கூறும்போது, மத உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த மாத இதழ் நிர்வாகத்தின் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த புத்தக நிறுவனத்தின் சார்பில் மன்னிப்பு கேட்டு கிறிஸ்துவ சமுதாய உறுப்பினர்கள் என்னிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த புகைப்படம் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு சிறிய அளவில் கறுப்பு வெள்ளையில் வெளியிடப்பட்டுள்ளது. கறுப்பு வெள்ளையில் இருந்ததால் இயேசு கிறிஸ்து கையில் பீர் கோப்பை மற்றும் சிகரெட் இருந்ததை கவனிக்கவில்லை என அந்த மாத இதழின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக