தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

1.3.12

சிரியா விவகாரம் : ஐ.நாவில் புதிய தீர்மானம் ஏற்பாடு தீவிரம்


சிரிய மக்களுக்கு, மனிதாபிமான உதவிகளை செய் வதற்கு, சர்வதேசத்தை அனுமதிக்குமாறுபுதிய பி ரேரணை ஒன்றை ஐ.நாவில் தாக்கல் செய்வதற்கு அமெரிக்கா உத்தேசித்துள்ளது.இப்பிரேரணைக்கு சீ னா ஆதரவு தருவதற்கு முன்வரும் என எதிர்பார்க் கப்படுகிறது. சிரியாவில் இடம்பெறும் வன்முறைக ளை முடிவுக்கு கொண்டு வரும் வகையிலும், அதி பர் அசாத்தை பதவி விலக்கும் வகையிலும், ஐ.நா பாதுகாப்பு சபை
கூட்டத்தொடரில் ஏற்கனவே கொண்டுவரப்பட்ட இரு பிரேர ணைகளை ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோற்கடித்திருந்தன.

இந்நிலையில் செவ்வாய்க்கியமை, ஐ.நா விடுத்திருந்த தகவல்களின் படி சிரிய வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7500 ஐ கடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் எடித் புவியர், வில்லியம் டேனியெல், ஜாவியர் எஸ்பினோசா எனும் மூன்று ஊடகவியலாளர்கள் இன்னமும் ஹோம்ஸ் நகரிகல் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மோதல்களில் காயமடைந்த சண்டே டைம் புகைப்பட காரர் போல் கோன்ரேவை பாதுகாப்பாக மீட்டு லெபனனானுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில், 13 போராளிகள் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் சிரியாவினுள் மனிதாபிமான தொண்டூழியர்களையாவது அனுமதிக்குமாறும், இதன் மூலம் மோதல்களை முடிவுக்கு கொண்டுவர முயற்சிக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்  மேற்குலக நாடுகளால் கொண்டுவரப்படும் இப்புதிய பிரேரணைக்கு, ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவை அவை எதிர்பார்த்துள்ளன.

0 கருத்துகள்: