புதுடெல்லி: டெல்லி ஜாமியா நகரில் வசிக்கும் மக்களை, காவல் துறையினர் சட்டவிரோதமாக கைது செய்தல், கடத்துதல் மற்றும் துன்புறுத்தும் செயல்களிலில் ஈடுபடுதல், போன்ற அரச பயங்கரவாதத்தை எதிர்த்து, நூற்றுக்கணக்கான மக்கள் நேற்று ஒன்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, டெல்லி பொது உரிமை அமைப்பின் செயலாளர் செய்யத் அக்லாக், அட்வகேட் பைரோஜ்,
SIO பொறுப்பாளர், அனீஸ் அஹ்மத் ஆகியோர் கூறுகையில்; காவல் துறையினர் மக்களின் பாதுகாப்புக்கே அன்றி, அவர்களை பயமுறுத்த இல்லை. மக்களை கைது செய்ய நேரிடும் போது, பொது உரிமையை பின்பற்றுவது, அவர்களின் தலையாய கடைமை ஆகும். அப்படி உரிமைகளை மீறும் தருணத்தில், உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டனர்.

வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்ட, இந்த எதிர்ப்பு பேரணி ஓக்லா காவல்நிலையம், ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழகம், ஜாகிர் நகர் வழியாக பட்லா ஹவுஸ் சென்றடைந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக