தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.2.12

குரான் எரிப்பு சம்பவத்திற்கு ஒபாமா மன்னிப்பு கேட்டது தவறு. நியூத் ஜிங்க்ரிச்

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கா ராணுவத் தளத் தில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்ட சம்பவத்துக்கு, அ திபர் ஒபாமா மன்னிப்புக் கோரியிருக்கக் கூடாது என் று குடியரசு கட்சியின் மூத்தத் தலைவர் நியூத் ஜிங்க்ரிச் சாடியுள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள ஓர் அமெரிக் க ராணுவத் தளத்தில் அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டன. இது, அந்நாட்டு மக்களிடம் கடும் கொந் தளிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, குரான்
எரிப்புச் சம்பவம் தவறு தலாக நடந்து விட்டது என்றும், அதற்காக தான் மிகவும் வருந்துவதாகவும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய்க்கு எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்தார். 

ஒபாமாவின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள குடியரசுக் கட்சியின் மூத்த தலைவர் ஜிங்க்ரிச், "ஆப்கானிஸ்தான் படை வீரர்களால் அமெரிக்க வீரர்கள் இருவர் கொல்லப்பட்ட நாளில், அந்நாட்டு அதிபரிடம் ஒபாமா மன்னிப்புக் கேட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. கர்சாய் தான் அமெரிக்க மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்," என்றார். 


குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், ஜிங்க்ரிச் முன்னிலையில் இருப்பது கவனத்துக்குரியது. 


முன்னதாக, குரான் எர்ப்பு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆப்கானிஸ்தானில் போராட்டக்காரர்கள் ஈடுபட்ட வன்முறையின்போது, ஆப்கானிஸ்தான் ராணுவ உடையில் இருந்த ஒருவரால், 2 அமெரிக்கப் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: