அருணாச்சல பிரேதசத்துக்கு தான் பயணம் மேற்கொள் வதை சீனா எதிர்ப்பது மிகவும் துரதிஷ்டமானது என்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார். மேலு ம், இதுதொடர்பான சீனாவின் கருத்து ஏற்கத்தக்கது அல் ல என்று அவர் கண்டித்தார். அருணாச்சல பிரதேச மாநி லத்தின் 25-வது ஆண்டு விழா நிகழ்வையொட்டி, அங்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி பயணம் மேற் கொள்ளவிருந்தார். இதற்கு
எதிர்ப்பு தெரிவித்த சீன அரசு, எல்லைப் பிரச்னை யை மேலும் சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதை இந்தியா தவி ர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது.
எதிர்ப்பு தெரிவித்த சீன அரசு, எல்லைப் பிரச்னை யை மேலும் சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதை இந்தியா தவி ர்க்க வேண்டும் என்று கூறியிருந்தது.
சீனாவின் இந்த எதிர்ப்பைக் கண்டித்துள்ள அமைச்சர் அந்தோனி, "சீனாவின் எதிர்ப்பை படித்ததும் வியப்படைந்தேன். இது மிகவும் துரதிஷ்டவசமானது. மிகுந்த ஆட்சேபத்துக்குரியது.
அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. பாதுகாப்புத் துறை அமைச்சராக இந்தியாவின் அனைத்து எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது எனது கடமை.
கடந்த 1984-ம் ஆண்டில் இருந்து நான் அருணாச்சல் போய் வருகிறேன். அம்மாநிலத்தின் வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாட செல்லும் எனக்கு, மிகுந்த வியப்பைத் தருவதாக சீனாவின் எதிர்ப்பு அமைந்தது," என்றார் அந்தோனி.
இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி அருணாச்சலபிரதேச வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தத சீனாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேசத்துக்கு இந்தியர்கள் செல்வதை யாரும் தடுக்க முடியாது என்றும், அம்மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக